“ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு
திருச்சி: “ஏ.ஆர்.ரஹ்மானுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. நடிகை மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கூறினார். திருச்சியில் இன்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் ஸ்டாலின் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். முதல்வரின் உத்தரவை … Read more