“முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். மத்திய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திருச்சி திருவெறும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கிய காங்கிரஸ் கட்சியுடன்தான் … Read more