#VELLORE :: லத்தேரி எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்…!!!

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். பொங்கலை முன்னிட்டு தொடங்கும் எருது விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 43 கிராமங்களில் எருது விடும் போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே அமைந்துள்ள பனமடங்கி கிராமத்தில் இன்று விடும் திருவிழா வெகு … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!! முழுவிவரம்!!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 சுற்றுகள் நடத்தப்பட்டு அனைத்து காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. 800 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். 23 காளைகளை அடக்கி தமிழரசன் என்பவர் முதல் பரிசு வென்றார். 19 காளைகளை அடக்கி மணி என்பவர் 2ஆம் இடத்தை பிடித்தார். 15 காளைகளை அடக்கிய ராஜா மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆனால், தனது நண்பர் அரவிந்த் ராஜ் உயிரிழந்த சோகத்தில் ராஜா பாதியில் வெளியேறினார். முதலிடம் பிடித்த தமிழரசனுக்கு முதலமைச்சர் … Read more

காணும் பொங்கல்: சென்னையில் தூய்மைப் பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள்

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் நாளை (ஜன.17) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் அதிகமாக கூடி பொழுதைக் கழிப்பார்கள். குறிப்பாக, சென்னையில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடுவார்கள். குறிப்பாக, காலை முதல் கடற்கரை, … Read more

PFI அமைப்பின் தலைவர் கைது.. பொங்கல் நாளில் NIA செய்த சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் இவர், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று பகல் 12மணியளவில் பழனி காந்திரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் இருந்த முகமது கைசரை NIA என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்து பழனி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அங்குள்ள போக்குவரத்து காவல் நிலைய அலுவலகத்தில் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி அட்ராசிட்டி செய்த பெண்: தருமபுரியில் பரபரப்பு

கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி  மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சுமதி (39). இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ள நிலையில் பி.துறிஞ்சிப்பட்டியில் சுமதி தனியாக வசித்து வந்தார்.  இந்த நிலையில், கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சுப்ரமணி … Read more

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்தர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன்

மதுரை: மதுரை அருகே பாலமேட்டில் இன்று கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 860 காளைகள் ஆரவாரமாக களமிறங்க, 355 மாடுபிடி வீரர்கள் அஞ்சாமல் எதிர்கொண்டு, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றினர். திமிறி எழும் காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கினர். இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 … Read more

லத்தேரி எருது விடும் விழாவில் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளைகள்! 3 பேருக்கு பலத்த காயம்

லத்தேரி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் பிரபலமான எருது விடும் விழா இன்று தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக 43 இடங்களில் இந்த போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று லத்தேரி அடுத்த பனமடங்கி கிராமத்தில் எருது விடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் வெளிமாவட்டம் … Read more

#ஈரோடு | உயிரிழந்த தாய்! குடிக்கு அடிமையான பாசமகன் எடுத்த முடிவு!

ஈரோடு : பெருந்துறை அருகே தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த அய்யகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 34). கட்டிடத் தொழிலாளியான இவரின் தாய், ஒரு வருடத்துக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்த குமார் மது குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கினார். மேலும் மேலும், தன் தாயை நினைத்து வருந்திய ஆனந்த குமார், சம்பவம் நடந்த அன்று காலை தாயாருக்கு திதி … Read more

சென்னை சர்வதேச புத்தகக் காட்சி.. அமைச்சர் அன்பில் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கிவைத்தார். 3 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் பல்வேறு நாட்டினர் கலந்து கொள்கின்றனர். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சர்வதேச புத்தகக் காட்சியை தமிழக பள்ளிக் … Read more