கு.க.செல்வம், பத்மபிரியாவுக்கு கட்சிப் பொறுப்பு – ‘அதிருப்தி’ பதிவுகளுக்கு திமுகவினர் ‘லைக்’ மழை!

மதுரை: திமுகவில் வேறு கட்சிகளுக்கு போய்விட்டு வந்தவர்கள், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கியதை சமூக வலைதளங்களில் திமுகவினர் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் பொதுக்குழுவும் நடத்தி முடிக்கப்பட்டது. திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி உட்பட பல்வேறு அணிகள் உள்ளன. இந்த அணிகளின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களை … Read more

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?; பீதி கிளப்பும்..ஷாக் நியூஸ்! பாகம்-1

ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்தது முதல் நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆதார் கட்டாய ஆவணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், நாளடைவில் அனைத்துக்குமான ஆவணமாகவே ஆதார் அட்டை மாறியது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் அனைத்து விதமான அடையாள ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் சமீபத்தில் மத்திய அரசு அனைவருடைய ஆதார் எண்களுடன் TANGEDCO ன் மின் … Read more

ரூ.1 கோடி கடன் உயிரை பறித்தது பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை; பெரியகுளத்தில் பரிதாபம்

பெரியகுளம்:  பெரியகுளத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமான கடன் மற்றும் தந்தை பணிக்கு செல்லாதது உள்ளிட்ட காரணங்களால், பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி(62). மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பயிற்சி மருத்துவராக பணியாற்றினார். மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு … Read more

சென்னை: அரசு மருத்துவமனையாக மாறும் மாநகராட்சி பள்ளி… காரணம் விளக்கும் எம்.எல்.ஏ!

சென்னை பாண்டி பஜார் பிரகாசம் சாலை மற்றும் ஜி.என்.செட்டி தெரு சந்திப்பில் கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1968 ஆண்டு இங்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, ஏராளமான மரங்கள் மற்றும் நல்ல காற்றோட்டமான இடவசதியுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை மூடிவிட்டு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தி.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு மாநகராட்சி ஆய்வு செய்யப்படுமென … Read more

நெகிழ்ந்துபோன அரியலூர் வீரர்கள்: எதிர்பாராத நேரத்தில் முதல்வர் உதவி

நெகிழ்ந்துபோன அரியலூர் வீரர்கள்: எதிர்பாராத நேரத்தில் முதல்வர் உதவி Source link

பாலியல் வழக்கு.! இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் தொந்தரவு வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (19). இவர் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பமானார். ஆனால் தினேஷ் குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதை எடுத்து அந்த பெண்ணுக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் … Read more

சட்டையை கிழித்துக்கொண்டு ஸ்டாலின் ஓடிய இடம்.. கனிமொழிக்கு அண்ணாமலை பதில்..!

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சட்டசபையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் சட்டையை கிழித்துக்கொண்டு அங்கிருந்து முதலில் ஓடி வந்தது ஆளுநர் மாளிகை தான் என்பதை கனிமொழி உணர்ந்துகொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ராஜ்பவனில் இன்று ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ‘ஆளுநர் பதவியே காலாவதியான பதவி என்று திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறாரே..’ என்று, நிருபர் ஒருவர் கேள்வி … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு 

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழக ஆளுநராக ஆர். என்.ரவி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பதவி ஏற்றுகொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு பிரச்சினைக்குரிய நபராகவே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட … Read more

பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000?

பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை, தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக … Read more

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: முதன்மைச் செயலாளர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக  மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. வரும் 6ம்தேதி மகாதீப விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக வரும் 5ம்தேதி முதல் 7ம்தேதி வரை 3 நாட்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. … Read more