என்னப்பா சொல்றீங்க..!! ஒரு வேளை சாப்பிட்ட நபருக்கு ரூ.1 கோடி 30 லட்சம் பில்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் துருக்கியை சேர்ந்த நுஸ்ரெட் கோக்சி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். சமையல் கலை வல்லுநரான இவருடைய உணவகத்தில் இவரால் தயாரிக்கப்படும் உணவுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு நபரின் ஒரு வேளை இரவு உணவுக்கு இந்திய மதிப்பில் ரூ 22 ஆயிரம் கொடுத்து உண்பதற்கு கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். துபாய் நாணய மதிப்பில் 1000 திராம். உணவு பிரியர்களும், சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்களும் இவரைத் தெரியும். இவரது பெயர் … Read more

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு (74), நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை: அவருக்கு மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான திண்டுக்கல் … Read more

விருதாசலத்தில் காணாமல் போன பைக்கை நாகை மாவட்ட காவலர் உபயோகித்தது அம்பலம்!

விருத்தாசலத்தில் மாயமான இரு சக்கர வாகனத்திற்கு அபராத குறுந்தகவல் வந்ததையடுத்து, யார் பயன்படுத்துகிறார்கள் என்று தேடிச்சென்றவருக்கு நாகை மாவட்ட காவலர் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், கடந்த ஓராண்டுக்கு முன் மாயமான இருசக்கர வாகனம் ஹெல்மெட் அணிய வில்லை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று வந்த குறுந்தகவல் மூலம், யார் பயன்படுத்தி வருவது என்பது அம்பலமாகி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (40). விவசாயக் கூலி தொழிலாளியான அவர், … Read more

சென்னைக்கு ஐம்பொன் சிலைகளை கடத்திய 2 பேர்.. அலேக்காக ஒருவரை அள்ளிய போலீசார்.! 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவர் உறங்கிக் கொண்டிருந்தபோது போலீசார் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு எழுப்பி விசாரித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்றொருவரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த பையை பறிமுதல் செய்து பார்த்தனர்.  அதில் முக்கால் அடி உயரம் கொண்ட பொன்மணி விளக்கு ஏந்திய ஒரு சிலை மற்றும் மூன்று அங்குலம் கொண்ட சிறிய பெருமாள் சிலை உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கோயம்பேடு … Read more

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை தமிழில் வர்ணனை கேட்க இத பண்ணுங்க..!!

உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், 1930ல் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 1942 மற்றும் 1946ல் உலகப் போர் காரணமாக நடத்தப்படாத நிலையில், 22வது தொடர் கத்தாரில் இன்று தொடங்கி டிச.18ம் தேதி வரை நடக்க உள்ளது.போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார் அணி முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்குகிறது. இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 … Read more

அடேய் நான் ஆம்பளடா… வெளி நாட்டுல வேலைன்னு இப்படியாடா செய்வீங்க..! மாடல் அழகியான தமிழக இளைஞர்

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை என்று ராமநாதபுரம் இளைஞரை, கம்போடியாவுக்கு அழைத்துச்சென்று, இணையதளத்தில் மாடல் அழகி போல போலியாக சாட்டிங் செய்யவைத்து சபலபுத்திக்காரர்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. சொந்தகாசில் சூனியம் வைப்பது போல ஏஜெண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து வெளி நாட்டு வேலைக்கு சென்று ஆபாச சாட்டிங் கும்பலிடம் சிக்கி அல்லோகலப்பட்ட நம்ம ஊர் இளைஞர் நீதிராஜன் இவர் தான்..! ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூரை சேர்ந்த டிப்ளமோ என்ஜீனியரான நீதிராஜனை … Read more

புதிய டிசைன்களில் இலவச வேட்டி- சேலை – அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய டிசைன்களில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்குத் தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி … Read more