'ஒரே நாளில் இழுத்து மூடிடுவேன்' திமுக எம்.எல்.ஏ மிரட்டல் வீடியோ!

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில்(Singaperumalkoil) அருகே டேஜுங் மொபட்ட என்ற தனியார் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்.கே.ஷர்மா என்பவர் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். ஆர்கே ஷர்மா இந்த நிறுவனத்தில் சில முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 06.8.22 அவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா … Read more

`திருமணத்தின் நோக்கமே சந்ததியை உருவாக்குவதுதான்; உடல் இன்பம் அல்ல’-சென்னை உயர்நீதிமன்றம்

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியை உருவாக்குவது தானே தவிர, உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் கணவனை விட்டு பிரிந்த மனைவியொருவர், தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி, குழந்தைகளை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி வழக்கு தொடரும் பிரிந்த தம்பதியரால் குழந்தைகள் தீய உலகத்திற்குள் கொண்டு செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார். திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்கத் தானே … Read more

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு தர்ம அடி!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வேலைபார்த்து வருகிறார். அவரது குடியிருப்பில் மேலும் பல பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் இரண்டு பேர் குளியல் அறை அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அங்கு கூடிய பொதுமக்கள் இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதனால் … Read more

இந்துக்கள் குறித்து கருத்துகள் – எதிர்ப்பு வலுத்தும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க மறுப்பதால் சர்ச்சை

சென்னை: இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மன்னிப்புக் கேட்க மறுப்பதால் எதிர்ப்பு வலுப்பெறுவதுடன், சர்ச்சையும் நீடிக்கிறது. திமுக துணைப் பொதுச் செயலரான ஆ.ராசா, ஏற்கெனவே சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோரின் பிறப்பை ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. பின்னர், தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், மனதைப் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆ.ராசா கூறினார். … Read more

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்! பால் உற்றினதும் எழுந்து வந்த மூதட்டி!

சென்னை: இறந்துவிட்ட ஒருவர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 72 வயது சந்திரா. இவருடைய கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு … Read more

பி.எம்., கேர்ஸ் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்

பி.எம்., கேர்ஸ் அறங்காவலராக டாடா நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முடிவு செவ்வாய்க்கிழமை பி.எம். கேர்ஸ் பிரதமர் மோடி எடுத்துள்ளார். மேலும், PM CARESக்கான ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கு மூன்று பெயர்களை பரிந்துரைத்தது. அவர்கள் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் டீச் ஃபார் … Read more

5 மாத கர்ப்பிணி தற்கொலை… அதிர்ச்சியில் மாமியாரும் தற்கொலை!!

புதுச்சேரி யூனியன் திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (29). பெயின்டராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்த இவர், கடந்தாண்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் வேலை செய்தார். அங்கு லேப் டெக்னீசியனுக்கு படித்து வந்த சீர்காழியை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து, கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அப்போது, ஆனந்தராஜின் தாய் மற்றும் அவரது மூன்று சகோதரிகளும், வரதட்சணையாக 20 சவரன் நகை, … Read more

வேலூரில் நாளை ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு

வேலூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நாளை(செப்.23) வேலூரில் நடைபெறவுள்ளது என சங்க மாநில பொதுச் செயலாளர் பா.ரவி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சங்கத்தின் 2-ம் மாநில மாநாடு வேலூர் தொரப்பாடி அழகாம்பாள் கிருஷ்ணசாமி முதலியார் திருமண மண்டபத்தில் நாளை (செப்.23) நடக்கிறது. இதில், மாநிலம் முழுவதுமிருந்து ஓய்வூதியர்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் இயக்குநர் முதல், இரவு காவலர் வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் என 5 … Read more