தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை

மதுரை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை என்ற தகவலும், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கரும்பு கடையில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு அவரை கைது … Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 13 நாட்கள் செல்ல அனுமதி

மதுரை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை… PFI அமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் கைது

மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், கேரளாவில் சுமார் 60 இடங்களில் NIA அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலவே எஸ்.டி.பி.ஐ கட்சி … Read more

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மரணம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் மாரடைப்பால் காலமானார். இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரின் மருமகன். அதிமுகவில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்த காலகட்டத்தில் கோவை மண்டல அதிமுகவின் அறிவிக்கப்படாத தளபதியாக இவர் பணியாற்றினார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர் இவர். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை … Read more

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மியான்மரில் சிக்கியுள்ள 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர். இது தொடர்பாக முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மியான்மர் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருப்பதாக மாநில அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தனியார் ஆட்கள் சேர்ப்பு முகமைகள் மூலம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக அவர்கள் தாய்லாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், … Read more

முதலில் இந்துக்கள், இப்போது தாய்மார்கள்: லேட்டா கண்டுபிடிச்ச அண்ணாமலை

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, சூத்திரர்கள் என்பவர்கள் யார், மனுஸ்மிருதி அவர்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது என்பதை செப்டம்பர் 6ஆம் தேதி திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசினார். பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் பேச்சை சர்ச்சையாக்கினர். இந்துக்களை ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டார் என்று சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதிமுகவும் இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. ஆ.ராசாவுக்கு எதிராக கடையடைப்பு போராட்டமும் பாஜகவால் நடத்தப்பட்டது. ராசாவுக்கு எதிராக காவல்துறையில் புகாரும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்துக்களை இழிவுபடுத்திவிட்டார் என்று திரித்து … Read more

கூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே பிதர்காடு பஞ்சோராவில் தோட்டத்தில் உள்ள மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. பாக்கு மரத்தை தள்ளிய போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

மாடலிங் பெண்களே குறி.. கவர்ச்சி போட்டோக்களை வைத்து மிரட்டியவருக்கு நேர்ந்த கதி!

மாடலிங் துறையில் விருப்பம் உள்ள பெண்ணிடம் கவர்ச்சிகரமான புகைப்படத்தை பெற்றுக்கொண்டு மூன்று லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஆண்டு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். அதில் அந்தப் பெண் தனக்கு மாடலிங் துறையில் விருப்பம் அதிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் அப்பொழுது அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு … Read more