மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான இயக்குநர் சிவலிங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரும் நாட்களில் அதிகமழை பெய்தாலும்கூட எவ்வித பாதிப்பும்இன்றி சீரான … Read more