நெருங்கும் தீபாவளி: எரியக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டுசெல்லவேண்டாம் – ரயில்வே எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ரயில்களில் எரியக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்வதற்கான சோதனையை ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர், பார்சல் மூலம் பட்டாசு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து … Read more