பாஜக என்றால் இந்துத்துவா! குடும்ப அரசியல் கட்சி திமுக! கோவை அதிமுக வேட்பாளர் விமர்சனம்!

Singai G Ramachandran : வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது!? வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும் என்று விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர்…

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மதுரை நாம் தமிழர் வேட்பாளர் சத்தியாதேவி மயக்கம்

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி வெயிலில் மயங்கி கீழே அமர்ந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து நெற்றியில் திருநீறு பூசி, கைத்தாங்கலாக அவரை அழைத்த சென்று வேட்புமனு தாக்கல் செய்ய வைத்ததால் சற்றே பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட், அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதனால், அரசியல் கட்சியினர் ஆட்டம், பாட்டம், ஊர்வலத்தால் ஆட்சியர் … Read more

பெண்கள் ஒரு முழம் பூ வாங்க கூட மு.க.ஸ்டாலின் கொடுத்த ரூ.1000 பயன்படவில்லை: அதிமுக வளர்மதி

காஞ்சிபுரம் திமுக எம்பி க.செல்வம் குறித்து விமர்சனம் செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடும் தாக்கி பேசுகையில், காஞ்சிபுரம் எம்.பியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என கூறினார்.

பம்பரம் சின்னம்: புதன்கிழமை காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ … Read more

என்னடா இது ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை.. ஒரே பெயரில் 5 பேர் போட்டி!

ராமநாதபுர மக்களவை தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிட உள்ள நிலையில் அதே பெயரில் 5 பேர் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.  

“தஞ்சை திமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் மாவட்ட செயலருக்கு 6 பவுன்” – அன்பில் மகேஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி அறிமுகக் கூட்டம் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் களப் பணியாற்ற வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மகளிருக்கு வழங்கும் உரிமைத் … Read more

இப்போதே ராஜினாமா செய்யுங்கள் – திமுக அமைச்சரை கிண்டல் செய்த ஆர்பி உதயக்குமார்!

தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.  

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து பிற்பகல் விளக்கமளிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி … Read more

சிறுநீரகம் பாதிக்கபட்ட கணவனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மனைவி!

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி   

குமரி தொகுதி பாஜக, அதிமுக, நாதக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்ன?

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் மனு தாக்கல் முடிவடைகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய இரு நாட்களில் 2 பேர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் … Read more