இனி நான் தான் தலைவன்.. ரவுடிகளுக்கிடையே நடந்த தகராறில் இளைஞர் படுகொலை.. திருப்பூரில் பரபரப்பு..!

கேங்க் லீடர் யார் என்ற தகராற்றில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் உள்ளிட்டோர் மீது அடிதடி உள்ளிட்டபல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்னிலையில், நண்பர்கள் ஐவரும் அங்குள்ள  மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ் நண்பர்களிடம் நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத் தான் இனி நீங்கள் கேட்க வேண்டும். நான் … Read more

ஸ்விக்கி நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று, தனது இருசக்கர வானத்தில் சென்றபோது, போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர், பளார் என கன்னத்தில் அறைந்ததுடன், வாகன சாவியையும் கைப்பற்றினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது பற்றி … Read more

“எல்.முருகன் வழியில் பதவிக்காக அரசியல் செய்கிறார் அண்ணாமலை” – செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: “தமிழிசை, எல்.முருகன் போல பதவிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது: “மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளர், பழைய ஆணையாளரை போல் மெத்தனமாக இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். மதுரை மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஊழியர்களுக்கு கூட ஊதியம் போட நிதியில்லை. அரசு துறைகளிடம் இருந்து வர வேண்டிய நிதியை மாநகராட்சி … Read more

நீங்க ரொம்ப டென்ஷன் ஆவீங்களா? உங்க உணவில் இதை சேர்த்துகோங்க

This 6 salads make you to reduce high blood pressure, நம்மில் சிலருக்கே சரியான வேளையில் உணவை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. மேலும்  அவர்கள் சரியான வழிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுகிறார்கள். நம்மில் பலர் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் மிக இளமையில் நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்த 6 வகை சாலட்டுகளை நீங்கள் சாப்பிடுவது அவசியமாகிறது. மஷ்ரூம் சாலட் ஒரு கப் நறுக்கிய மஷ்ரூம், 2 … Read more

கடந்த ஓராண்டில் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்.!

கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொகொண்டார்.  ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் … Read more

வார்டுகளில் குறைகளை சரிசெய்ய பணமாக அளிப்பதா, பொருளாக வழங்குவதா? – சென்னை மாநகராட்சி ஆலோசனை

சென்னை: வார்டுகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய ஆண்டுதோறும் பணமாகத் தருவதா, பொருளாகத் தருவதா என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சாலை ஒட்டும்பணி, தெருவிளக்கு சரி செய்யும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாயை வார்டு உதவி பொறியாளர்களுக்கு பராமரிப்பு நிதியாக வழங்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் பணமாக அளிக்கலாமா அல்லது பொருளாக வழங்கலாமா என்று மாநகராட்சி அதிகாரிகள் … Read more

உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடை மாற்றம்

சாலையில் சென்ற பெண்ணை இடித்துச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டிக் கேட்ட தனியார் நிறுவன ஊழியரை, போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், தனியார் பள்ளி வாகனம் ஒன்று, சாலையில் சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அதனை தட்டிக்கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் … Read more

சுகர் இருக்கா? கோடையில் உங்களுக்கு உதவும் 3 ட்ரிங்க்ஸ்!

Tami Health Drinks For Diabetes Patients : கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை மனதில் வைத்து பலரும குளிர் பிரதேசத்தை நோக்கிய படை எடுப்பார்கள். இன்னும் சிலர் குளிர்ச்சியான பானங்களை தங்களது உணவுப்பட்டியலில் முன்னணியில் வைப்பார்கள். ஆனால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் குளிர்பாணங்களை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை. குளிரூட்டிகள், பழச்சாறுகள் மற்றும் பிற பானங்கள் போன்ற எதையும் மற்றவர்கள் உட்கொள்ளலாம். ஆனால் இந்த பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல. நீரிழிவு நோயாளிகள் … Read more

சென்னையின் அதிமுக்கிய பிரச்சனை., பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் நாளை வெளியிட உள்ள வரைவு அறிக்கை.!

பசுமைத் தாயகம் சார்பில், ‘சென்னை தூய காற்றுச் செயல் திட்டம்’ வரைவு அறிக்கையை நாளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிடுகிறார். காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரே காற்றை தான் சுவாசிக்கின்றோம். தூய காற்று ஒரு அடிப்படை மனித உரிமையும் கூட. ஆனால், இன்று நகர்ப்புறங்களில் தூய காற்று காணக்கிடைக்காத அதிசயம் ஆகிவிட்டது. பெருநகரங்களில் வானம் அதன் நீல நிறத்தை இழந்துவிட்டது! உயரைக் காக்கும் … Read more

செருப்பால் சிக்கிய கொள்ளையர்கள்.. தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.. 32 சவரன் நகை பறிமுதல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை அவர்கள் அணிந்த செருப்பை அடையாளமாக வைத்து போலீசார் கைது செய்தனர். சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டுகள் அரங்கேறி வருவதாக வந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனிடையே, முத்துக்கவுண்டன் புதூர் அருகே வாகன தணிக்கையின் போது அவ்வழியாக வந்த 3 பேர், போலீசாரை கண்டு தப்பியோடிய நிலையில் … Read more