வீடு கட்டும் பணியின் போது பழைய சுவர் இடிந்து விபத்து.. 3 தொழிலாளர்கள் படுகாயம்.!

தூத்துக்குடியில் வீடு கட்டும் பணியின் போது அருகில் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். டி.ஆர்.நாயுடு தெருவில் பாலு என்பவரின் புதிய வீடு கட்டும் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  Source link

திருநெல்வேலி அருகே சோகம்: காருக்குள் மூச்சுத்திணறி 3 குழந்தைகள் உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் கதவை திறக்க தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பாலகர்பள்ளி தெருவை சேர்ந்த நாகராஜ் – அருணா தம்பதியரின் குழந்தைகள் நித்திஷ் (7), நிதிஷா (5), சுதன் – தபிஷா தம்பதியரின் மகன் கபிசந்த் (4) ஆகியோர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகராஜனின் அண்ணன் மணிகண்டனின் காரில் விளையாடிக்கொண்டிருந்தனர். கார் … Read more

ஓராண்டில் திமுக ஆட்சி: பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை எப்படி சமாளித்தீர்கள்? #PTsurvey

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் திமுக ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தலைமையின் செயல்பாடுகள் மற்றும் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்னென்ன? மக்களுடைய மதிப்பீடு என்னென்ன? என்பது குறித்த கேள்விகளும், எதிர்க்கட்சிகளுடைய செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? எந்தெந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது? இளைஞர்கள் மத்தியில் எந்தெந்த தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன. … Read more

ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு… இந்த மாசம் ரேஷன் பொருட்களை சீக்கிரம் வாங்கி விடுங்க மக்களே!

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடப்போவதாக திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.  தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி கிடைக்கவில்லை எனில் திட்டமிட்டபடி 13.06.2022 அன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் … Read more

மாஸ் காட்டும் காடுவெட்டி பட டீசர்.! யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம்.! 

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் காடுவெட்டி.  இந்தத் திரைப்படம் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காடுவெட்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், காடுவெட்டி படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சற்றுமுன் … Read more

கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டும் பணி செய்து வந்த நபர் சடலமாக மீட்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி செய்து வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதனூர் குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்திற்கான கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த சீப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் நேற்று வேலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, … Read more

எல்ஜிபிடிக்யூ+ தனிநபர்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் தங்குமிட வசதியை ஏற்படுத்துக: வானவில் கூட்டமைப்பினர்

கோவை: நெருக்கடியான சூழ்நிலைகளின்போது எல்ஜிபிடிக்யூ+ தனிநபர்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் தங்குமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என கோவை வானவில் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கல்கி சுப்பிரமணியம், சிவக்குமார் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 4) செய்தியாளர்களிடம் கூறியது: ”பெரும்பான்மை சமூகத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எல்ஜிபிடிக்யூ+ பிரிவினர் எதிர்கொள்கின்றனர். வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளின்போது எல்ஜிபிடிக்யூ+ தனிநபர்களை பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் தங்குமிட வசதியை தமிழக … Read more

சாதாரண தலைவலியா? ஒற்றை தலைவலியா? – அறிகுறிகளும் விளைவுகளும்

தலைவலி நபருக்கு நபர் பொதுவாக மாறுபடும். அதனால் சிலருக்கு ஒற்றை தலைவலி இருந்தால்கூட தெரியாது. சிலருக்கு சாதாரண தலைவலி அடிக்கடி வந்தால்கூட அது ஒற்றை தலைவலியாக இருக்கலாம் என்ற பயம் எழுந்துவிடும். ஆனால் உண்மையில் ஒற்றை தலைவலி(migraine) என்றால் என்ன? தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் … Read more

மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் தேடுறீங்களா? உஷார்… டி.ஜி.பி எச்சரிக்கை

Tamilnadu DGP Sylendra babu alerts girls on Matrimonial fraud: மேட்ரிமோனியல் இணையதளங்களில் வரன் தேடும் பெண்கள், எச்சரிக்கையாக இருக்கவும், மோசடி கும்பலால் ஏமாற்றப்படலாம் என்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கையை செய்தியை விடுத்துள்ளார். சமீபகாலமாக மோசடி செய்பவர்கள் உங்கள் மொபைல், மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பி, உங்களுக்கு பரிசு வந்திருக்கிறது. குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வருகிறார். அந்தவகையில், இதேபோன்ற கும்பல்கள், தற்போது மேட்ரிமோனியல் தளங்களை இதுபோன்ற மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள். … Read more

பிரபல அரசியல்கட்சியின் மாநில தலைவரின் தயார் மறைவு.! டிடிவி தினகரன், சீமான் இரங்கல்.!

SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், நெல்லை முபாரக் அவர்களின் தாயார் ஷரிஃபா பீவி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், நண்பர் திரு.நெல்லை முபாரக் அவர்களின் அன்பு தாயார் ஷரிஃபா பீவி அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.  தாயாரை இழந்துவாடும் திரு.முபாரக் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த … Read more