மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தினசரி அறிக்கை: சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தினசரி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சென்னையில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கி.மீ. நீளமுள்ள … Read more

ஆசியக் கோப்பை ஹாக்கி: சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு!

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணியில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டை பெற்ற தமிழக வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் மே 23 முதல் ஜுன் 1வரை நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய ஹாக்கி அணி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றது மட்டுமின்றி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை … Read more

யார் எதிர்க்கட்சி? அ.தி.மு.க- பா.ஜ.க- பா.ம.க யுத்தம்

Who is main opposition in Tamilandu? Race between ADMK, BJP, PMK: பா.ம.க தலைமையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் மற்றும் பா.ஜ.க.,வின் சமீபத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றுடன், தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி என்ற போட்டி, அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகளிடையே நிலவி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. கூடுதலாக அவர்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலமும் இருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் … Read more

பெரிய அளவு முறைகேடு நடந்திருக்கலாம்…, அவர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்துங்கள்.., தமிழக அரசு மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.!

ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசால் சரியான திட்டமிடுதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியைப் பல இடங்களில் ஆசிரியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.  விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டால், தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் மாணவச் செல்வங்கள் உயர் படிப்புகளில் … Read more

மாயமான ரூ.20 லட்சம் பணம்.. இளைஞரை ஆள்வைத்து கடத்திய பெரியப்பா.. 4 பேர் கைது..!

சென்னை பெரவள்ளூர் அருகே, வீட்டில் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் பணம் காணமல் போனது தொடர்பாக இளைஞர் ஒருவரை அவரது பெரியப்பாவே ஆள் வைத்து கடத்த முயன்ற விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். 20 வயதான பிரசாந்த், தனது பெரியம்மா பானுமதி, பெரியப்பா சிவக்குமாருடன் பெரவள்ளூரில் அவர்களது வீட்டில் தங்கியிருந்தார். பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் சிவக்குமார், கார் விற்பனை மூலம் பெற்ற பணம் 50 லட்சம் ரூபாயை மனைவியிடம் கொடுத்திருக்கிறார். அதில் 20 … Read more

புதுச்சேரி மின்துறை தனியார்மய திட்டத்தை கைவிடுக: பாதிப்புகளைப் பட்டியிலிட்டு மத்திய அமைச்சரிடம் திருச்சி சிவா மனு

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனே கைவிடுமாறு மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங்கிடம் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘தனியார் நிறுவனங்களால் கிராமப்புறங்களில் விநியோக வலையமைப்பை நிர்வகிப்பது எளிதானது மற்றும் சாத்தியமில்லை. டெல்லி, மும்பை மற்றும் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் மிக உயர்ந்த அளவில் மின் கட்டணங்கள் விதிக்கப்பட்ட போதிலும் அதன் தரம் மிகவும் மோசமாக இருந்தது. தனியார்மயமாக்கல் சேவைகள் அதன் தரத்திற்கு மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை, மேலும், … Read more

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிப்பது உறுதி – ஜெயக்குமார்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும் என்றும், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மாநில, மாவட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி … Read more

TNPSC Group 4 VAO தேர்வு; இப்படி படிங்க… 180+ கொஸ்டின் உறுதி

TNPSC group 4 VAO exam How to answer 180 questions: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க எப்படி படிக்கலாம் என்பதற்கு டிப்ஸ் இங்கே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் … Read more

வீடு புகுந்து இளைஞர் படுகொலை… மர்ம நபருக்கு வலைவீச்சு.. திண்டுக்கல் அருகே பரபரப்பு..!

வீடு புகுந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பவனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் . இவர் அந்த பகுதியில் பெயிண்ட்ரராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பிரபாகரனின் கழுத்தை அறுத்தவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின்  சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த … Read more

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் … Read more