மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை கவனித்து வரும் பொறியாளர் தம்பதியர்

மதுரை: மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை தலைமை தாங்கி கவனித்து வருகின்றனர் பொறியாளர் தம்பதியர். தம்பதியர்களில் கணவர் மதுரை ரயில் நிலைய பணிகளையும், மனைவி ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளையும் கவனித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இதில் மதுரை … Read more

FIR மட்டும் போட்டிருந்தால் பாஸ்போர்ட் வழங்க தடையில்லை – நீதிமன்றம்

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்துவருகிறார். தமது பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவர் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் திருச்சியில் இருந்தபோது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு … Read more

ரூ.86,912 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக விடுவித்தது மத்திய அரசு; தமிழகத்திற்கு ரூ.9602 கோடி விடுவிப்பு

Central govt releases Rs.86.912 crore to states for GST compensation: மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு தொகையான ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.9602 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. “மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் திட்டங்கள் குறிப்பாக மூலதனச் செலவுகள், இந்த நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மத்திய அரசு … Read more

ஒருதலை காதலியுடன் பேச தடையாக இருந்த கணவன் கொடூர கொலை.. மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஒருதலை காதலியின் கணவனை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்  ராஜேஷ்குமார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் ராகுல் என்ற மகனும் உள்ளனர். சம்பவதன்று, ராஜேஷ் நண்பர் மருது சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகளுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடயே நடந்த வாக்குவாதத்தால் ராஜேஷை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ராஜேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு வழங்கிய கர்ப்பிணி பெண்..!

நாகையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கர்ப்பிணி மீனவப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை வழங்கினார். வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த மீனவப் பெண், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். முன்னதாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் … Read more

பழங்குடியினருக்காக ஒதுக்கிய ரூ.265 கோடி பயன்படுத்தாமல் அரசிடமே திருப்பி ஒப்படைப்பு: ஆர்டிஐ தகவல்

மதுரை: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது. அந்த நிதி தற்போது வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திரட்டிய தகவல்களைப் பகிர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், ”மத்திய அரசு மற்றும் தமிழக அரசு … Read more

சென்னை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் – 12 மணிநேரத்தில் 9 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் விவகாரத்தில் 12 மணி நேரத்தில் கடத்தல்காரர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குன்றத்தூர் அடுத்த கோவூர், ராயல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(48). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று இவருக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் வீட்டை வாங்குவதற்கு கணவன், மனைவி இரண்டு பேர் முன் தொகை கொடுக்கவந்து பேசி கொண்டிருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் … Read more

சாதி, மதச் சண்டை இல்லாத அமைதிப் பூங்கா தமிழகம்: டெல்டா டூரில் ஸ்டாலின் பேட்டி

Stalin speech after visiting delta drain works: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டே காவிரி வரத்து வாரிகளை தூர்வாரி தண்ணீர் தங்கு தடையின்றி செய்ய ஏற்பாடு செய்ததால், … Read more

நெல்லை.! மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓட்டம்.!

நெல்லையில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓடியுள்ளார். நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைகுளம் நடுதெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 8 வயதுடைய மகளும் உள்ளனர். கல்யாணசுந்தரம் திருப்பூரில் கார் மெக்கானிக் வேலையைப்பார்த்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் திருப்பூரிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி … Read more

பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தின் மீது மோதி விபத்து.!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த காவலரின் தாய் உயிரிழந்தார். ஏரியூரைச் சேர்ந்த விஜயகுமார், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி, தாய் மற்றும் குழந்தைகளுடன் இன்னோவா காரில் ஏரியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில், காலை 6.30 மணியளவில் ஆதனூர் அருகே வந்த போது விபத்து நேர்ந்தது. இதில் படுகாயமடைந்த காவலரின் தாய் … Read more