பொன்முடி மகன், பழனி மாணிக்கம் உள்பட திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்பிக்கள் யார்?

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர்.அதேநேரம் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை ஸ்டாலின் அறிவித்தார். அதில், திமுகவின் முக்கிய தலைவர்களாக அறியப்படும் … Read more

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…? அதிமுக கூட்டணி பங்கீடு – பரபரப்பாகும் தேர்தல் களம்!

AIADMK DMDK Alliance: அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாமக முன்வைத்த கோரிக்கைகள்… பாஜக அளித்த ‘உத்தரவாதம்’ – டீல் என்ன?

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டங்களுக்குப் பின், கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், “பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறுகிறது” என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6.40-க்கு தைலாபுரம் தோட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் … Read more

திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி?

DMK Candidate List 2024: மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறார்.   

கொங்கு மண்டலத்தை கைப்பற்ற முனைப்பு: பாஜகவுக்கு கைகொடுக்குமா மோடியின் பிரச்சாரம்?

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக, அதன் கூட்டணியின் வேட்பாளர் களே வெற்றி பெற்றனர். கோவை, நீலகிரியில் இருமுறை பாஜக எம்.பிக்கள் தேர்வாகியுள்ளனர். இச்சூழலில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நடப்பு மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் சில மக்களவைத் தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும் … Read more

ஓசூர் மலைக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா துவக்கம்

ஓசூர் மலைக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம். ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி காட்சி.  

வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் ஸ்டாலின்: தேர்தல் அறிக்கையும் வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஒருசில நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான … Read more

கடல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரம்; தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய ரூ.11,485 கோடி செலவில் வழித்தடம்

சென்னை: தமிழகத்தில் கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க ரூ.11,485 கோடி செலவில் வழித்தடத்தை மத்திய அரசு அமைக்கிறது. தமிழகம், குஜராத் மாநிலங்களில் உள்ள கடல் பகுதிகளில் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதை மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்துறை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக இரு மாநிலங்களிலும் தலா 5 ஆயிரம் மெகாவாட் திறனில் கடலில் காற்றாலை மின்நிலையங்கள் … Read more

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு, முதல்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற … Read more