சர்ச்சை கிளம்பியதும் உஷாரான இபிஎஸ் – நெல்லையில் வேட்பாளர் மாற்றம்… பின்னணி என்ன?

Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

“பதவி விலகிவிட்டு தேர்தலை சந்தியுங்கள்” – நமச்சிவாயத்துக்கு புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: “புதுச்சேரி உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநில அந்தஸ்து சம்பந்தமாக மத்தியில் ஆளும் பாஜக, ஏற்கெனவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் – திமுக கூட்டணியும் வரும் மக்களவை தேர்தலை முன்னிறுத்தி பொய் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த திமுக – … Read more

பங்குனி உத்திரம்! தேரோட்டம், வழிபாடு! காவடி என ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

Panguni Uthiram : பங்குனி உத்திரத் திருநாளன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்… தேரோட்டம்… 

பிரச்சாரத்துக்கு சினிமா பிரபலங்கள் அழைப்பு: சூடுபிடித்த மதுரை தொகுதி

மதுரை என்றாலே அரசியல் மட்டுமின்றி சினிமாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. மதுரையிலிருந்து சென்ற பலர் இன்று திரையுலகில் சாதித்து வருகின்றனர். அதனால், தேர்தல் நேரங்களில் சினிமா பிரபலங்கள் மதுரையில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. அதன்படி, இந்த மக்களவைத் தேர்தலில் சினிமாவில் நடித்துள்ள மருத்துவர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு சினிமா, டிவி சீரியல் நடிகர், நடிகைகள் வர உள்ளனர். மதுரை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன், மருத்துவத் தொழிலில் மட்டுமில்லாது … Read more

“ஜெயித்தால் என் இதயம் நின்று விடும்!” – ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் பேட்டி

தருமபுரி: அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் எப்படி இருக்கும் என கேட்டதற்கு எனது இதயம் நின்று விடும் என, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதிக்கு முதல் வேட்பாளராக மனு தாக்கல் செய்த பத்மராஜன் `இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: 1988 முதல் 238 தேர்தல்களில் மனு தாக்கல் … Read more

சவாலான தொகுதி… முதல்வரின் துணிச்சலான முடிவு: தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகழாரம்

Lok Sabha Elections: கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொடுத்துள்ளார்.

“பாமக வேட்பாளர்களில் 30% மகளிர், 20% பட்டியலினத்தோர்; இதுதான் சமூகநீதி” – ராமதாஸ்

சென்னை: பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) … Read more

பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்… இது தான் சமூகநீதி!

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

“தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும்” – அண்ணாமலை

கோவை: “தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக தமிழக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜகவேட்பாளருமான அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். கோவை மக்கள் அடுத்த 40 நாட்கள் பார்ப்பார்கள். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு பணமழை பொழியும். இலவசங்கள் … Read more

தஞ்சையில் வாக்கிங் சென்றபோது வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை தஞ்சையில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ, … Read more