தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்த மகள்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்த தந்தை உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் … Read more

சினிமா பார்த்தால் சிறை வடகொரியா எச்சரிக்கை| If you watch the movie, you will be jailed in North Korea

பியாங்யாங் : வட கொரியாவில் ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு பெற்றோர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா ஒரு மர்ம பிரதேசமாகவும் இரும்புத்திரை போர்த்திய நாடாகவும் உள்ளது.இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். இங்கு அதிபர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மேற்கத்திய நாடுகளின் படங்களை தடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நாடு … Read more

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது – அமெரிக்கா புகழாரம்

வாஷிங்டன்: தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் மட்டும் 153 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. … Read more

தமிழக இளைஞர் ஆஸி.,யில் சுட்டுக்கொலை| Shot dead in Tamil Nadu Youth Association

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் துப்புரவுப் பணியாளரை கத்தியால் குத்திய, தமிழக இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹமத்துல்லா சையத் அகமது, 32, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்தார். அங்குள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் நேற்று காலை, துப்புரவுத் தொழிலாளியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். போலீசார் அகமதுவை கைது செய்து ஆபர்ன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு, ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்த முயன்றார். … Read more

டிக் டாக்கை நீக்க அமெரிக்க அரசு கெடு| The US government has 30 days to remove Tik Tok from government equipment.

வாஷிங்டன் அரசுக்கு சொந்தமான, ‘மொபைல் போன்’கள் உட்பட, அனைத்து விதமான தகவல் தொடர்பு உபகரணங்களில் இருந்தும், ‘டிக் டாக்’ செயலியை நீக்க அமெரிக்க அரசு 30 நாட்கள் ‘கெடு’ விதித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த, ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், ‘டிக் டாக்’ மொபைல் போன் செயலியை உருவாக்கி, நிர்வகித்து வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியா உட்பட சில நாடுகள், ‘டிக் டாக்’ செயலிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. … Read more

இந்தியா – பிரிட்டன் மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவது துவக்கம்| New Visa to be issued to India-UK students begins

லண்டன் :இந்தியா, பிரிட்டன் இடையேயான ஒப்பந்தத்தின்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான ‘விசா’வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கிஉள்ளது. கடந்தாண்டு நவம்பரில் ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த, ஜி – ௨௦ மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதன்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புகளை படிப்பதற்கு, பரஸ்பரம் விசா வழங்கப்படும். இந்த விசா, இரண்டாண்டுகளுக்கானது. இந்த திட்டத்தின் கீழ், ௧௮ … Read more

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் 6 ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு..!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல், 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மீண்டும் திறக்கப்பட்டது. கெய்ரோவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய அல்-ஹக்கிம் பள்ளிவாசல், கிபி 990ல் சுமார் 14 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 85 மில்லியன் எகிப்தியன் பவுண்ட் பட்ஜெட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் முடிவுற்று, இந்த பிரம்மாண்ட பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  Source link

மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!

தென்அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயம் அடைந்ததாக தகவல்  வெளியாகி உள்ளது. மெக்சிகோ-அமெரிக்க எல்லையான நியூவோ லாரெடோ நகரில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர்.  துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். Source link

அமெரிக்காவில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசி வரும் கடும் பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

அமெரிக்காவின் மேற்கு மண்டலத்தில் உள்ள நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனிப்புயலால் அந்நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பனிப்புயலால் அங்குள்ள தஹோ ஏரி பனிகட்டியாக உறைந்துள்ள நிலையில், நாளை வரையில் அப்பகுதியில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. Source link

“எங்கள் தலைவர் நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார்” – ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பெண் பிரதிநிதி பேச்சு

ஜெனிவா: ஐ.நா. சபைக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதி கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டதாக தகவல் வெளியானது. அந்த நாடு … Read more