சிவிங்கிகளை அழைத்து வரசிறப்பு விமானம் தயார்| Dinamalar

வின்தோயக்-இந்தியாவுக்கு புறப்பட தயாராக உள்ள சிறுத்தை இனத்தைச் சேர்ந்த எட்டு சிவிங்கிகளை அழைத்து வர, புலி உருவத்துடன் கூடிய சிறப்பு விமானம், நமீபியாவை சென்றடைந்துள்ளது. நம் நாட்டில், சிவிங்கிகள் அழிந்துபோன இனமாக, 1952ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் மத்திய அரசு, கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஐந்து பெண், மூன்று ஆண் என, எட்டு சிவிங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக, நமீபியா அறிவித்தது. இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் … Read more

மலேசிய மூத்த அரசியல் தலைவர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்!

மலேசிய நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தை சே்ர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டத்தோ சாமி வேலு. 1936 இல் மலேசியாவின் இபோ நகரில் பிறந்த இவர், 1959ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசியலில் இருந்து வந்தார். இளம் வயது முதலே பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாமி வேலு, சுமார் 30 ஆண்டுகள் மலேசிய நாட்டின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளார். இத்தகைய பெருமைமிக்க சாமி வேலு வயோதிகம் காரணமாக சில மாதங்களாகவே உடல்நலம் குன்றி இருந்தார். … Read more

சூட்கேஸில் இருந்த அழுகிய உடல்கள்; நியூஸிலாந்தை உலுக்கிய வழக்கில் 42 வயது பெண் கைது!

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில், யாரும் உரிமை கோராத பொருட்கள் கடந்த மாதம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்களில் சூட்கேஸ் ஒன்றூ இருந்தது. அதனை விலை கொடுத்து வாங்கிய குடும்பம், அதில் அழுகிய சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.   சூட்கேஸில் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில், சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய சடலங்கள் பத்து வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது … Read more

ரஷ்ய அதிபரை கொலை செய்ய முயற்சி..! – தீவிர விசாரணை தொடக்கம்..!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கொலை முயற்சியிலிருந்து தப்பி உள்ளார்.ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கொலை செய்ய முயற்சிசெய்து அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பாதுகாப்பு படையினரால் உயிர் தப்பினார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொலை செய்ய ஏற்கெனவே 5 முறை முயற்சி நடந்ததாக அவரே கடந்த 2017ம் ஆண்டு தெரிவித்திருந்தார். 6வது முறையாகத் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் விளாதிமிர் … Read more

ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வும், கேமரா கண்களால் கொத்தப்படும் மேகன் மார்கலும்

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்த நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பிரிட்டன் மக்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சார்லஸ் – டயனா தம்பதியின் இரண்டாவது மகனான ஹாரியின் மனைவி மேகன் மார்கலின் இருப்பு, ஊடக வெளிச்சத்தால் சூழப்பட்டுள்ளது. மேகன் எவ்வாறு நடக்கிறார், அவரது முக பாவனைகள் எவ்வாறு உள்ளது, அவர் தன் கைகளை பொதுவெளியில் எவ்வாறு குலுக்குகிறார் என அவரின் ஒவ்வொரு அசைவும் உற்று நோக்கப்படுகிறது. காரணம், மேகன் ஒரு கருப்பினப் … Read more

அமெரிகாவில் குறையும் குரங்கம்மை தொற்று..! – மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

அமெரிகாவில் குரங்கம்மை தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்று கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்து மருத்துவர்கள் “ குரங்கம்மை தொற்று எண்ணிகையில் குறைந்தாலும் இன்னும் முழுமையான அளவில் தடுக்கப்படவில்லை. குரங்கம்மை நோயை முழுமையாக கட்டுப்படுத்த நாம் தவிர முயற்சியில் இறங்க வேண்டும். குரங்கம்மை தோற்று குறித்து பல்வேறு தரப்பினருக்கு சந்தேகங்கள் உள்ளன. குரங்கம்மை நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் .” என்று மருத்துவர்கள் … Read more

விபத்தில் சிக்கிய உக்ரேன் அதிபர் வாகனம்..! – உயிர் தப்பியது எப்படி..?

உக்ரேனிய அதிபர் வாகனம் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ளராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் … Read more

அமெரிக்க டாலருக்கு குட் பை சொல்லும் சர்வதேச வர்த்தகம்! இந்திய நாணயத்தின் முன்னேற்றம்

புதுடெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிரது. இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு செங்குத்தான அதிகரிப்பு உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பத்து மடங்கு இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இப்போது இந்தியாவின் இறக்குமதி எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை பூர்த்தி செய்கிறது என்பது இரு நாடுகளின் வர்த்தக ரீதியிலான உறவுக்கு குறிப்பிடத்தக்க உதாரணம் ஆகும். இந்த நிலையில், ரஷ்யாவுடனான வர்த்தக தீர்வை இந்தியா … Read more

எலிசபெத் ராணி உடல் அருகே பாதுகாப்பில் இருந்த காவலர் திடீர் மயக்கம்: லண்டனில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், … Read more

ராணிக்கு அஞ்சலி செலுத்த 4 கி.மீ தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து, எடின்பரோ நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் அரச குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நேற்று லண்டன் கொண்டு வரப்பட்டது.  அங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகளும், அரண்மனை பணியாளர்களும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் … Read more