பணம் முக்கியமில்லை, அன்பு மட்டுமே போதும்: வருங்கால கணவர் வாங்கிய ரு.21 லட்சம் கடனை அடைத்து திருமணம் செய்து கொண்ட பெண்…!

பீஜிங், கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரத்தைச் சேர்ந்த சொள என்ற பெண், தனது வருங்கால கணவராக ஹூ என்ற நபரை சந்தித்தார். சந்தித்த முதல் நாளே ஒருவருக்கொருவர் காதல் பற்றிக்கொண்டது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பாக ஒரு மாதத்திற்கு ஒருவரையொருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் ரூ 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது … Read more

சீனாவில் ஒரேநாளில் 37 மில்லியன் பேருக்கு கொரோனா; உலகநாடுகள் அதிர்ச்சி.!

சீனாவில் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அரசு இதுவரை மவுனம் காத்து வருகிறது. எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் பாதிக்கப்படுவோர் … Read more

பாரீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.. 69 வயது நபர் கைது..!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குர்து கலாச்சார மையம் மற்றும் சலூனில் 69 வயது நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். சலூனில் பதுங்கியிருந்த கொலையாளியை போலீஸார் கைது செய்தனர். பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த அவர், ஏற்கனவே 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் பாரீஸில் தீவிரவாத தாக்குதல்கள், குழு மோதல்கள் அடிக்கடி நடைபெறுவதால் பீதி நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.   Source … Read more

பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டான் சோப்ராஜ்| Sobhraj was exiled to France

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: பிரபல சர்வதேச கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, இன்று விடுதலை செய்யப்பட்டார். உடனடியாக பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார். இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், தென்கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் இவன் மீது உலகின் பல நாடுகளில் 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இந்தியா உட்பட பல நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டான். நேபாளத்தில் 1975ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு … Read more

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்! 2200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் சூறாவளியாக வீசும் பனிபொழிவு: வானிலை காரணமாக அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில், வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது. அதே சமயம் தொடர் பனிப்பொழிவும் மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இதற்கிடையில், இந்த சீசனில் முதல் முறையாக மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்தப்பித்து போன இயல்பு வாழ்க்கை தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் … Read more

ரஷ்யா எதிரி..சீனா போட்டியாளர்..அமெரிக்கா உறுதி.!

சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச அமைப்புக்கு ரஷ்யா உடனடி அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் நோக்கத்துடன் சீனாவை அமெரிக்காவின் “ஒரே போட்டியாளராக” அவர் ஒப்புக்கொண்டார். மேலும், உக்ரேனில் ரஷ்ய மோதலை திட்டவட்டமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி இராஜதந்திரம் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது குறித்து அவர் கூறும்போது “ரஷ்யா சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச அமைப்புக்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்கும்போது, சர்வதேச ஒழுங்கை … Read more

சீனாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்று..! பிணவறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள சடலங்கள்

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சோங்கிங் மாகாணத்தில் உள்ள பிணவறையில் ஏராளமான சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 சடலங்கள், பாலித்தீன் கவர்களின் சுற்றப்பட்ட நிலையில், எரியூட்டுவதற்காக மேசைகள் மீது வைக்கப்பட்டுள்ள காட்சி, அதில் இடம்பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா பரவலால் அதிகளவில் மரணங்கள் நிகழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என சீன அரசு தெரிவித்து வருகிறது. Source link

பல்கலையில் பெண்கள் படிக்க தடை ஏன்? – தாலிபான் அமைச்சர் விளக்கம்!

ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிவதாக, ஆப்கானிஸ்தான் உயர் கல்வித் துறை அமைச்சர் நேதா முகமது நதீம் தெரிவித்து உள்ளார். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். … Read more

இம்ரான்கானின் முன்னாள் மனைவிக்கு 3வது திருமணம்.. தன்னை விட 13 வயது இளையவரை மணந்தார்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம், தன்னை விட 13 வயது இளையவரை,3-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது 49 வயதாகும் ரெஹாம், மாடலும், நடிகருமான 36 வயதான மிர்சா பிலால் பைக்கை, அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டதாக, ட்விட்டரில் அறிவித்துள்ளார். மிர்சா பிலால் பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும், தனது மகனின் ஒப்புதலுடனும் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-பிரிட்டன் தொலைக்காட்சி செய்தியாளரான ரெஹாம் மற்றும் இம்ரான்கான் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் … Read more