சிறிய ரக விமானம் கடற்கரையில் விழுந்து விபத்து..!

அமெரிக்காவில், சிறிய ரக பயணிகள் விமானமொன்று கலிபோர்னியா கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மலிபு நகரம் நோக்கி சென்ற அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதால், விமானி கடற்கரையில் விமானத்தை தரையிறக்க முயன்றார். அப்போது தலைக்குப்புற விழுந்த விமானத்தில் சிக்கிக்கொண்ட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். Source link

'சீரியல் கில்லர்' சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

காத்மாண்டு: சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். அவர் விடுதலையாகியுள்ள நிலையில், அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியனவற்றை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சார்லஸ் சோப்ராஜிடம் பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. அவருடைய உண்மையான பாஸ்போர்ட் எதுவென்பது தெரிந்த பின்னர் அவரை பிரான்ஸுக்கு நாடுகடத்த முடியும். முன்னதாக, சார்லஸ் சோப்ராஜ் தன் முதுமையைக் காரணம் காட்டி விடுதலை கோரியிருந்தார். இந்நிலையில், நேபாள் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்ததோடு … Read more

அமெரிக்காவில் வீசிவரும் கடும் பனிப்புயல்… ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து.. நெடுஞ்சாலைகளும் மூடல்!

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக வந்ததுடன், 5 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி கொட்டிக்கிடப்பதால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து, சாலை போக்குவரத்து தடை உள்ளிட்டவைகளால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக திட்டமிடப்பட்டிருந்த பயணங்களும் தடைபட்டுள்ளன. Source link

அவர்கள் படிக்கட்டும்; ஆப்கன் பெண்களுக்கு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் ஆதரவுக் குரல்

காபூல்: ஆப்கன் பெண்களை கல்வி கற்க அனுமதியுங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது.தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் நாடு முழுவதிலும் தலிபான்களின் முடிவை எதிர்த்து போராட்டங்கள் … Read more

ஜெருசலேமில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.. ஒட்டகத்தில் சென்று வாழ்த்து தெரிவித்த “கிறிஸ்துமஸ் தாத்தா..!”

ஜெருசலேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர், ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சென்று, மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பாலஸ்தீனிய கிறிஸ்தவரான இசா கஸ்ஸிஸி என்ற அந்த நபர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று, மக்களுக்கு கிறிஸ்துமஸ் மரங்களை பரிசளித்தார். அவருடன், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தாமஸ் நைட்ஸும் சென்றார். இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் நீட்டித்து வரும் நிலையில், அவர் அமைதிக்கு அழைப்பு விடுத்தார். Source link

பாலியல் சுகத்திற்காக பின்பகுதியில் வெடிகுண்டை சொருகிய 88 வயது முதியவர்… அலறிய மருத்துவர்கள்!

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ள செயிண்ட் மூஸ்ஸே மருத்துவமனைக்கு, 88 வயது முதியவர் தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கிக்கொண்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை  (டிச. 17) அன்று வந்தார். வெடிகுண்டு இருப்பதை அறிந்ததால் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த பலரும், மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,”கடந்த சனிக்கிழமை (டிச. 17) இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை அவசரநிலை ஏற்பட்டது, இதற்கு வெடிகுண்டு அகற்றும் பணியாளர்களின் … Read more

லெபனானில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம்..!

லெபனானில் விழிப்புணர்வை ஏற்படுத்த, மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பரப்பவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நன்கொடையாக பெறப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பச்சை நிற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் வெள்ளை நிற பாட்டில்கள் மூலம், இந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைக்க ஒரு மாத காலம் ஆனதாக கூறப்படுகிறது. நாம் வாழும் பூமியை சேதப்படுத்தினால், வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என வடிவமைத்தவர்கள் தெரிவித்தனர். Source … Read more

போரில் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “போரில் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்” என்று உறுதிபட தெரிவித்தார். சோவியத் யூனியன் உடைந்தபோது 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனிநாடாக உதயமானது. ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த உக்ரைன் கடந்த 2014-ம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின்பக்கம் சாய்ந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப் படையில் (நேட்டோ) இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதன்காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த … Read more

உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – டிமிட்ரி பெஸ்கோவ்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தால், எந்த ஒரு நன்மையும் உக்ரைனுக்கு கிடைக்காது எனவும், உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும், ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி, மோதலை தீவிரப்படுத்தும் எனவும், உக்ரைனுக்கே எதிர்வினையாற்றும் என்றும் எச்சரித்தார். Source link

பீலே உடல் நிலை மோசம்; சிறுநீரகம், இருதயம் பாதிப்பு| Pele was in poor health; Kidney and heart damage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாவ் பாலோ: பீலே உடல் நிலை மோசமாக உள்ளது. இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, 82. மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ‘ஆப்பரேஷன்’ செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் … Read more