'உடல் உறுப்புகள் செயலிழப்பு' – பர்வேஸ் முஷாரப்புக்கு வந்த அமிலோய்டோசிஸ் பாதிப்பு

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன்காரணமாக 1999-ம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்த முஷாரப், 2001-ம் ஆண்டு ஜூனில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். 2008 ஆகஸ்ட் … Read more

கோதுமை ஏற்றுமதி தடை தளர்வு; சர்வதேச நிதியம் வரவேற்பு| Dinamalar

வாஷிங்டன் : கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ளதை, சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை தடுக்க, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டன.இதை ஏற்று, கோதுமையை ஏற்றுமதிசெய்ய மத்திய … Read more

கோதுமை ஏற்றுமதி தடை தளர்வு சர்வதேச நிதியம் வரவேற்பு| Dinamalar

வாஷிங்டன்:கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ளதை, சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்து உள்ளது. இதனால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை தடுக்க, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது.இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டன.இதை ஏற்று, கோதுமையை ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு அனுமதி … Read more

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு ஒத்துழைப்பு தர கனடா சம்மதம்| Dinamalar

ஒட்டாவா:பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை தொடர்பாக இந்தியா எடுக்கும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பாடகர் சித்து மூசேவாலா சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த கோல்டி பிரார் எனும் சத்திந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில், பஞ்சாப் அரசின் கோரிக்கையை ஏற்று, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, அனைத்து நாடுகளுக்கும் ‘ரெட்கார்னர் நோட்டீஸ்’ … Read more

பாக்., மாஜி சர்வாதிகாரி துபாயில் கவலைக்கிடம்| Dinamalar

துபாய்:பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப்,78, ராணுவ நடவடிக்கை வாயிலாக, 1999ல் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். அது முதல், 2008 வரை, பாக்., அதிபராக பதவி வகித்தார். இந்தியா – பாக்., இடையிலான கார்கில் போருக்கு இவர்தான் காரணம். கடந்த, 2016 முதல் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்து வருகிறார்.இந்நிலையில், … Read more

இலங்கை நெருக்கடியை சமாளிக்க இரு அமைச்சகங்கள் உருவாக்கம்| Dinamalar

கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே, இரண்டு அமைச்சகங்களை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு, மின் வெட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தபய ராஜபக்சே சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இந்தப் பொறுப்பில் ஆளுங்கட்சி சார்பில் தகுதிஉள்ளவர்களை நியமிக்கவே தான் … Read more

வியட்நாமுக்கு இந்தியாரூ.7.7 கோடி நிதியுதவி| Dinamalar

நா தராங்:நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று, நா தராங் நகரில் உள்ள விமானப்படை பயிற்சி பள்ளிக்கு சென்ற அவர், அங்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க, இந்தியா சார்பில் ௭.௭ கோடி ரூபாயை வழங்கினார். இது பற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ”வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை ஊழியர்களிடம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை அதிகரிப்பதில், இந்த … Read more

கட்டாய மரணதண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவு..!

கொடுங்குற்றங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கட்டாய மரணதண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவுசெய்துள்ளது. மலேசியாவில் கொலைக்குற்றம், போதை மருந்து கடத்தல், தீவிரவாத செயல்கள், ஆள் கடத்தல், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு கட்டாய மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த கட்டாய மரணதண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.  இதனை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் படி மரணதண்டனையை ரத்து செய்ய அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. Source link

பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டு பிடித்தனர். இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பாக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் … Read more