"ரிலாக்ஸ்" என்ற வார்த்தை வடிவில் வானில் பறந்த விமானி… உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் உலக நாடுகள் அமைதி காக்க நூதன முறையில் விமானி வேண்டுகோள் <!– &quot;ரிலாக்ஸ்&quot; என்ற வார்த்தை வடிவில் வானில் பறந்த விமானி… உ… –>

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் உலக நாடுகள் அமைதியடைய வேண்டி நூதன முறையில் மொல்டோவா நாட்டு விமானி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனி விமானம் மூலம் வானில் வட்டமடித்த விமானி ரிலாக்ஸ் என்ற வார்த்தை வடிவில் ஆகாயத்தில் பயணித்துள்ளார். போர் பதற்றத்தில் இருந்து மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுதலை பெற்று நிம்மதியடையக் கோரிக்கை விடுத்துள்ளார். வானில் ரிலாக்ஸ் என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவப் பாதையில் விமானி சென்ற வீடியோ ரேடார் கண்காணிப்பு இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.  … Read more

54 செயலிகளுக்கு தடை சீன அரசு கவலை| Dinamalar

பீஜிங்:சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 54 செயலிகளுக்கு, சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்து, சீன வர்த்தக அமைச்சக செய்தி … Read more

உக்ரைன் மீது குண்டு வீச்சு தாக்குதல் – தொடங்குகிறதா 3-ம் உலகப்போர்?

கிவ், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.  உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை … Read more

கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்: குவிந்த கண்டனங்களால் ட்வீட் நீக்கம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமாவார். முன்னதாக, கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ம் … Read more

ஹிட்லருடன் ஒப்பிட்டு.. ஜஸ்டின் மீது பாய்ந்த மஸ்க்.. அப்புறம் அடிச்சார் பாருங்க பல்டி!

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு டிவீட் போட்டு சர்ச்சையைக் கிளப்பி விட்டார் எலான் மஸ்க் . ஆனால் தனது டிவீட்டை பின்னர் அவர் நீக்கி விட்டார். கனடாவில் போக்குவரத்து ஊழியர்கள், குறிப்பாக லாரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகளை இயக்காமல் நிறுத்தி அமெரிக்கா- கனடா இடையிலான போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும் போராட்டத்தில் குதிக்கவே கனடாவே ஸ்தம்பித்தது. அந்த நாட்டின் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை … Read more

ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோஷமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்.! <!– ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோ… –>

ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோஷமாக மோதியதில் படகில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். வடக்கு ஐரோப்பாவில் யெலேனியா என்ற புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜெர்மனியில் சொகுசுப் படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது மணிக்கு 94 மைல் வேகத்தில் காற்று வீசியது. இதில் படகின் மேல்தளத்தில் அடுத்தடுத்து வந்த அலைகள் அதிவேகத்தில் மோதின, இதில் படகில் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கி கடல் நீர் உள்ளே … Read more

உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு

கிவ்: ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை … Read more

54 செயலிகளுக்கு இந்தியா தடை: சீன அரசு கவலை| Dinamalar

பீஜிங் : சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 54 செயலிகளுக்கு, சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்து, … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.38 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

’நேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர்': சிங்கப்பூர் பிரதமர் கருத்தால் சர்ச்சை

நேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல நாடுகள் மிக உயர்ந்த கொள்கைகள், மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் தொடங்கப்பட்டன. ஆனால் நாளடைவில் அரசியலின் தன்மை மாறிவிடுகிறது. இப்போதுள்ள பல அரசியலமைப்புகள் அதனை தோற்றுவித்தவர்கள் கொள்கைக்கு … Read more