இலங்கை: கார் பந்தயத்தின்போது கோர விபத்து – 6 பேர் பலி; அதிர்ச்சி வீடியோ

கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் இன்று கார் பந்தயம் நடைபெற்றது. மலைப்பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கார் பந்தயத்தை கண்டுகளித்தனர். பந்தயகளத்தில் கார்கள் சீறிப்பாய்ந்தன. அப்போது, ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதையடுத்து, அருகில் இருந்த பார்வையாளர்கள் ஓடி சென்று காரில் சிக்கிய வீரரை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டிருந்த மற்ற கார்கள் வேகமாக வந்தன. அதில் ஒரு கார் பார்வையாளர்கள் … Read more

அமெரிக்கா: பாலஸ்தீனர்களுக்கு விடுதலை கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வம்சாவளி பெண் ஆர்ப்பாட்டம்

நியூயார்க், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதன்படி, 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வன்முறைக்கு உயிரிழந்தனர். 200-க்கும் மேலானவர்கள் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. சிலர் பணய கைதியாக இருக்கும்போதே உயிரிழந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள மீதமுள்ளவர்களையும் மீட்போம் … Read more

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) கடந்த 18-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் 19 தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார். பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை … Read more

பாகிஸ்தானில் மர்ம கும்பல் மீண்டும் அட்டூழியம்; 2 சுங்க அதிகாரிகள் படுகொலை

கராச்சி, பாகிஸ்தானில் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை ஒருபுறம் மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரதமர் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு அமைந்ததும் பணவீக்க கட்டுப்பாட்டு நடவடிக்கை உள்ளிட்ட பல விசயங்களில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. எனினும், பொதுமக்கள் பல இடங்களில் தாக்கப்படுவதும், வழிப்பறி, கொள்ளைக்கு உள்ளாவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், அரசு அதிகாரிகளும் தப்பவில்லை. இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாவட்டத்தில் கடந்த வியாழ கிழமை துப்பாக்கி ஏந்திய … Read more

1 கோடி ரூபாய்க்கு மொபைல் பில்… அதிர்ச்சியில் உறைந்த ஜோடி – நடந்தது என்ன?

World Bizarre News: சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வயதான ஜோடிக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் மொபைல் பில் வந்திருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு

காசா, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதன்படி, 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வன்முறைக்கு உயிரிழந்தனர். 200-க்கும் மேலானவர்கள் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. சிலர் பணய கைதியாக இருக்கும்போதே உயிரிழந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள மீதமுள்ளவர்களையும் மீட்போம் … Read more

சிறையில் மனைவியின் உணவில் டாய்லெட் க்ளீனர் கலப்பு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகார் 

இஸ்லாமாபாத்: தனது மனைவிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இந்த சூழலில், தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் … Read more

ஈகுவடார் நாட்டில் எல் நினோ பாதிப்பு; 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்

குவிட்டோ, ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் நொபோவா பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்று கொண்ட அவருடைய ஆட்சியில், கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதில், ராணுவம் மற்றும் போலீசார் இடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது முறையாக அந்நாட்டில் நெருக்கடி நிலையை நொபோவா அறிவித்து உள்ளார். ஈகுவடாரின் எரிசக்தி உட்கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை … Read more

போர் பதற்ற சூழலில்… இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

தெஹ்ரான், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களை கட்டமைக்க உள்ளது என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை கூறியுள்ளன. ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும் மற்றும் குடிமக்களின் நன்மைக்காகவும் என்று கூறியுள்ளது. இந்த சூழலில், ஈராக் … Read more

ஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

பாக்தாத், ஈராக் நாட்டில் உள்ள பாபில் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ‘கல்சு முகாம்’ என்ற பெயரில் மிகப்பெரிய ராணுவ படைத்தளம் அமைந்துள்ளது. இது ஈராக் ராணுவம், காவல்துறை மற்றும் ஹஷத் ஷாபி படைகளின் படைத்தளமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த படைத்தளத்தின் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹஷத் ஷாபி படையைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். … Read more