'மெஸ்ஸி' பெயரை கூறி ஹாமாஸ் படையினரிடம் இருந்து சாதூர்யமாக தப்பிய மூதாட்டி

இஸ்ரேல், இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் … Read more

300 schoolchildren kidnapped at gunpoint in Nigeria | நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல்

குரிகா, மார்ச் 11- நைஜீரியாவில், 300 பள்ளி மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்., அல் – குவைதா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. தாக்குதல் கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது … Read more

நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம்.. மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பிரதமர்

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள … Read more

உள்ளாட்சி தேர்தல் தான் எனது கடைசி தேர்தல்… துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன்

துருத்தி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன், (Turkish president Recep Tayyip Erdogan) தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

இஸ்லாமாபாத், பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. அக்கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் … Read more

அமெரிக்கா: விபத்தில் சிக்கிய தேசிய காவல் படை ஹெலிகாப்டர்; 2 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஸ்டார் கவுன்டி பகுதியில் லா குருல்லா என்ற சிறிய நகரத்தில் மெக்சிகோ எல்லையருகே தேசிய காவல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், தேசிய காவல் படை வீரர் மற்றும் எல்லை ரோந்து பணி ஏஜென்டுகள் 3 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, ரியோ கிராண்ட் ஆற்று பகுதியருகே அவர்களின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி டெக்சாஸ் … Read more

தான்சானியா: கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி

ஜன்ஜிபார், தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சிலர் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதில், 8 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறும்போது, உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி … Read more

கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை

லாகூர், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து, மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தால், அவமதித்தால் மற்றும் மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதரை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு … Read more

விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன – 5 பேர் பலி

காசா சிட்டி, இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த … Read more

71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

மும்பை: 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். 71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும். மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இந்த போட்டியில் … Read more