34 வயதில் பாட்டியான பெண்… அதிர்ச்சியில் 90s கிட்ஸ் – அது எப்படி?

34 Year Old Woman Become Grandmother: சமூக வலைதளத்தில் பிரபலமான 34 வயது பெண் ஒருவர் தான் பாட்டி ஆகியிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.

உள்நாட்டு யுத்தத்தின்போது மாயமானவர்கள் கதி என்ன? – இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை பரிந்துரை: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

ராமேசுவரம்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின்போது உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அப்போது, அரசையும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும் எதிர்த்து கருத்துகளை வெளியிட்டோர், மனிதஉரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியோர் என பலரும் மாயமானார்கள். இதுவரை அவர்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ உறுதி செய்யப்படவில்லை. அவர்களது உறவினர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தலைநகர் கொழும்பிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையிலான 2,645-வது நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் … Read more

சவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்… மூக்கில் விரல் வைக்கும் உலக நாடுகள்!

Fashion Show in Saudi Arabia: இஸ்லாமிய நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் வியாழக்கிழமை அரேபிய அழகிகள் ராம்ப் வாக் வாக் செய்ததை உலகமே வியந்து பார்த்தது. 

ஸ்பெயின், போர்ச்சுக்கல் வான்பரப்பில் ஒளிர்ந்த நீலநிற விண்கற்கள்: வீடியோ வைரல்

நிலவு, நட்சத்திர ஒளிகள், தெருவிளக்கு வெளிச்சம் என இருக்கும் இரவு வானம் திடீரென நீலநிற ஒளியுடன் மிளிர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஆச்சரிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மக்கள். இவ்விரு நாட்டு மக்களும் சனிக்கிழமை இரவு வானத்தில் திடீரெனத் தோன்றிய விண்கல், வான்பரப்பை நீல நிறத்தில் ஒளிரச்செய்த ஒரு கண்கவர் காட்சிக்கு சாட்சிகளாகி இருக்கின்றனர். திகைப்பூட்டும் இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் அதனைத் தங்களின் கேமிராக்களில் படம் பிடித்து சமூக ஊடங்களில் வைரலாக்கி … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம் – டிரம்ப் ஆருடம்

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி அவர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் வசைபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “முட்டாள்களை வைத்து இந்த நாட்டை … Read more

கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் – தூதரகம் அறிவுரை

பிஷ்கேக், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கிடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தின் சில விடுதிகள் தாக்கப்பட்டன. இதில், வெளிநாட்டு மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கிர்கிஸ்தான் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன. இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாங்கள் நம் மாணவர்களுடன் தொடர்பில் … Read more

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்; 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு

சிங்கப்பூர், சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி … Read more

ஆப்கானிஸ்தான்: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் அங்கு அடிக்கடி ஆயுதமேந்திய கும்பல் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக இதுவரை பலன் அளிக்கவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் நேற்று ஆயுதமேந்திய கும்பல் … Read more

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயினில் அனுமதி மறுப்பு

மேட்ரிட் (ஸ்பெயின்): சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த சரக்கு கப்பல் மரியான் டேனிகா. இந்த கப்பல் சென்னையிலிருந்து கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 8-ம் தேதி புறப்பட்டு இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை நோக்கி சென்றது. இந்த கப்பலில் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் கன்டெய்னர்களை அனுப்பியுள்ளது. அந்த கன்டெய்னர்களை … Read more

அமெரிக்காவில் சோகம்; விபத்தில் தப்பிய இந்தியர் மற்றொரு விபத்தில் பலி

ஐதராபாத், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வடக்கு சார்லோட் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவர் அப்பாராஜு பிருத்விராஜ் (வயது 30) என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் எல்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர். பிருத்விராஜ், அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள் கார் ஒன்றில் சென்றபோது, திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், காரில் ஏர்பேக் … Read more