இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Powerful earthquake in Indonesia

ஜகார்த்தா, கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து தனிம்பர் தீவில் உள்ள இரண்டு பள்ளி கட்டடங்களும், 15 வீடுகளும் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு பலத்த சேதமடைந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். நில … Read more

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.  தனிம்பார் பகுதியில் பூமிக்கடியே 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 7 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியிலும்  உணரப்பட்டதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி..!

இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர ராக்கெட்டை பொருத்தி, அதிலிருந்து செயற்கைக்கோள்களை ஏவ, இங்கிலாந்து விண்வெளி முகமை திட்டமிட்டது. அதன்படி, அந்நாட்டின் கார்ன்வலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் விமானம் புறப்பட்டது. திட்டமிட்டபடி, 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. எனினும், புவி வட்டப்பாதையில் ராக்கெட் திடீரென விலகிச்சென்றதாகவும், இதனால் திட்டம் … Read more

ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு ஒன்பது நீதிபதிகள் பெயர் பரிந்துரை| Nine judges have been nominated for the post of Chief Justice of the Court

புதுடில்லி : பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள ஒன்பது நீதிபதிகளை, தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை தேர்வு செய்கிறது. இதன்படி இன்று நடந்த கொலீஜியம் ஆலோசனை கூட்டத்திற்கு பின் மும்பை, மணிப்பூர், கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 9 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய … Read more

பிரிட்டன் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி: விஞ்ஞானிகள் ஏமாற்றம்| Britains rocket launch project fails: scientists disappointed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைகோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ‘போயிங்’ 747 என்ற விமானத்தில் 70 அடி உயர ‘லாஞ்சர்- ஒன்’ என்ற … Read more

கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!

பாகிஸ்தானில் உணவுநெருக்கடி: பாகிஸ்தானில் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர் கொள்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. கைபர் பன்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை பெற மக்கள் முண்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.  சந்தையில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளைப் பெற ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் … Read more

மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – தேர்தல் கமிஷன் அதிரடி!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத … Read more

ஒரு கிலோ கோதுமை ரூ.150… அலைமோதும் கூட்டம் – பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உதவ மறுக்கும் உலக நிதி அமைப்பு: பாகிஸ்தானில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்துவிட்டது. நிதி உதவி கிடைத்தால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் எனும் நிலையில் உள்ள பாகிஸ்தான், … Read more

பசுமை வனமாக மாறிய மெக்காவின் பாலைவனம்.. மலைப்பகுதிகளில் புற்கள் படர்ந்திருக்கும் அரிய காட்சி..!

வறண்ட பாலைவன நாடாக அறியப்படும் சவூதி அரேபியாவின் மெக்கா மலைப்பகுதிகள், தற்போது பசுமை வனமாக மாறியிருக்கும் அரிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மெக்கா மலைப்பகுதிகள் பொதுவாக வறண்டு பாலைவனமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய கனமழையால், பாலைவனமாக இருந்த பகுதிகளில், தற்போது புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன. ஒட்டகங்கள், புற்கள் மீது நடந்துச்சென்ற காட்சிகளை, சவூதியின் வானிலை ஆர்வலர் அப்துல்லா அல்சுலாமி செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.