ஒத்துழைக்க மறுத்ததால் மேயரை கடத்திய ரஷியப்படை- உக்ரைன் பாராளுமன்றம் அறிவிப்பு

உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் இன்று 17-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அதேபோல் அந்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் உள்ளது. ஆனால் தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை.

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். இதனால் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தியபடியே இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

இதனால் உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  உக்ரைனில் உள்ள மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை ரஷியப் படைகள் கடத்திச் சென்றதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தெற்கு உக்ரைனின் மெலிடோபோல் நகைரை ரஷிய படை ஆக்கிரமித்துள்ளது. அங்கு, 10 பேர் கொண்ட குழு மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திச் சென்றுள்ளது. ஆயுத விநியோகப் பிரச்சினையைக் கையாளும்போது மேயர் ரஷியப் படைகளுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டதால்  சுற்றி வளைத்து கடத்தியதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், மேயர் கடத்தலை ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தினார். அதில், வெளிப்படையாக ரஷியப் படையெடுப்பாளர்களின் பலவீனத்தின் அறிகுறியாகும். ரஷியப் படை அடுத்தகட்ட பயங்கரவாதத்திற்கு நகர்ந்துள்ளனர்.

மெலிடோபோல் மேயர் பிடிபட்டது ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது. உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம் என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
மகளிர் உலக கோப்பை – ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.