தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்..!

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு நிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில் திருப்பத்தூர், தஞ்சாவூர், … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்..!!

ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன. என்ன விதிகள் மாறுகின்றன மற்றும் அதன் தாக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 1. 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான மாற்றங்கள் இன்று ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது புதிய வரி விதிப்பில் வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.7 … Read more

இன்று முதல் இ.சி.ஆர் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு..!!

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடியிலும், திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடியிலும் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கு செல்லும் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ஒருவழிப் பயணத்திற்கு ரூ.47, ஒரு நாளில் திரும்ப ரூ.70, பலமுறை பயணம் செய்ய ரூ.128, மற்றும் மாதக் கட்டணம் ரூ. 2,721; இலகுரக … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு – இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என ஏப்.3-ல் முடிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது இறுதி விசாரணை நடத்துவதா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்குவதா என்பது குறித்து ஏப்.3-ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து 28-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது … Read more

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் – கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு

புதுடெல்லி: இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் … Read more

வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்

திருவொற்றியூர்: சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறும்போது, குறிப்பிட்ட தொகை முத்திரைதாள் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சில உரிமையாளர்கள் பதிவின்போது முத்திரை தாள் நிர்ணய கட்டணத்தை குறைவாக செலுத்தி, ஆவண பதிவு செய்து விடுவார்கள். இவ்வாறு குறைவான கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள ஆவணங்கள் … Read more

ஓராண்டு சிறை தண்டனை சித்து இன்று விடுதலை

பாட்டியாலா: ஓராண்டு சிறை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே நன்னடத்தை அடிப்படையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்து இன்று விடுதலையாகிறார்.  கடந்த  1988ம் ஆண்டு நடந்த சாலை  விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான  சித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்தாண்டு மே 20ம் தேதி முதல்  பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறை தண்டனை வரும் மே 16ம்  தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், கிட்டத்தட்ட 45 நாட்கள் முன்னதாக … Read more

மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு'

'கீழக்காடு' மற்றும்' 'பற்றவன்' ஆகிய படங்களை தயாரித்ததோடு, 'கீழக்காடு' படத்தை இயக்கிய சத்தியமூர்த்தி ஜெயகுரு, தனது சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் 'ஆன்மீக அழைப்பு' திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு, முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஆதேஷ் பாலா, ரோஜா துரை ராமச்சந்திரன் மற்றும் புதுமுக நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் விமான பணிப்பெண் சுபிக்ஸா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் மேலும் ஐந்து புதுமுக நடிகைகளும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். உலகில் நடைபெறும் பல ஆச்சரியமான நிகழ்வுகளில் மறுபிறவியும் … Read more