கஷாயத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த காதலி கைதான நிலையில் தற்கொலைக்கு முயற்சி..!

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காதலி கிரிஷ்மா காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலையை சேர்ந்த சாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் உறுதியானதையடுத்து காதலி கிரிஷ்மா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடுமங்காடு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்   காவல்நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் கிருமி நாசினியை குடித்து கிரிஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீசார்,  திருவனந்தபுரம் … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – டி.ராஜா வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். இதுதொடர்பாக, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலையும், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் நாட்டின் அதிபராக … Read more

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து | ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் 500 பேர் வரை அனுமதி

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. 1889-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள மச்சூ நதியின் குறுக்கே, மன்னர் வாக்ஜி தாகோரால் தொங்கு பாலம் கட்டப்பட்டது. 233 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில், ஐரோப்பிய பாணியில் இப்பாலம் கட்டப்பட்டது. தர்பார்கர் அரண்மனை, லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் இந்தப் பாலம் பலமுறை புனரமைக்கப்பட்டு உள்ளது. … Read more

சூதாட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!

கர்நாடக மாநிலம் மைசூரில், சூதாட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.கமடகேரி கிராமத்தை சேர்ந்த அஸ்வத், அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில், நாற்காலியில் இருந்து சரிந்த அஸ்வத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  Source link

பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு… கனேடிய குடும்பம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை கனடாவின் ஒன்ராறியோவில் ஒரே மகனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவின் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை என குறிப்பிட்டுள்ளனர். ஞாயிறன்று இரவு நடந்த இச்சம்பவத்தில், 46 வயது Brian Desormeaux, 43 வயது Janet மற்றும் 17 வயது Ashton … Read more

நதிகளை இணைக்கக்கோரி வழக்கு

மதுரை: தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைத்து, நதிகளை இணைக்கக் கோரிய வழக்கில் கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜரானார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உருவாகி அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளில் தடுப்பணை கட்டவும், ஆங்காங்கே நதிகளை இணைக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் … Read more

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள்; காங். தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மறைந்த இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தியின் தியாக நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். விவசாயம், … Read more

சிந்தனைக்களம்: அதிகாரமில்லாத ஆணையம் எதற்கு? | Dinamalar

நாட்டில் ‘கூடுதல் வட்டி தருகிறோம்; உங்கள் முதலீட்டை இரண்டே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி தருகிறோம்; ஈமு கோழியில் லாபம் எக்கச்சக்கமாக கொட்டும்; இறால் பண்ணை அமைத்து சம்பாதியுங்கள்’ என்ற ரீதியில் பல ‘டுபாக்கூர்’ நிறுவனங்கள் மக்களின் சேமிப்பை சுரண்டி வருகின்றன. எத்தனை நிறுவனங்களில், எத்தனை லட்சங்களை பறி கொடுத்தாலும், திரும்பத் திரும்ப ஏமாறுவது மக்களுக்கு வாடிக்கையாக உள்ளது. காவல்துறை விடுக்கும் எச்சரிக்கைகளை காது கொடுத்து கேட்பதுமில்லை; பொருட்படுத்துவதுமில்லை. இந்த ‘டுபாக்கூர்’ நிறுவனங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனவோ, அதே போல, … Read more

தமிழக அரசியல் பற்றி இரண்டு பாகமாக படம் இயக்கும் ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா எப்போதுமே சர்ச்சையான இயக்குனர். அதிரடி கருத்துக்களை கூறி பரபரப்பு ஏற்படுத்துவார், சர்ச்சையிலும் சிக்குவார். அதேபோல வில்லங்க படங்கள் எடுத்தும் பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் லெஸ்பியன் உறவை பற்றி படம் எடுத்து அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் கிடப்பில் உள்ளது. என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா ஆனபோது இவர் லட்சுமி என்டிஆர் என்ற படத்தை எடுத்தார். ஜெயலலிதா வாழ்கை படமானபோது சசிகலா வாழ்க்கையை படமாக்க போவதாக அறிவித்தார். இப்படி அதிரடியாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். … Read more

பிரேசில் அதிபர் தேர்தலில் அதிர்ச்சி கொடுத்த மாஜி| Dinamalar

பிரேசிலியா :பிரேசில் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் புதிய திருப்பமாக, முந்தைய அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டாசில்வா, 77, வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனாரோவை எதிர்த்து, முன்னாள் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டாசில்வா போட்டியிட்டார். கடும் போட்டி நிலவி வந்த நிலையில், லுாலா, 50.9 சதவீத ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அதிபர் ஜெயிர் போல்சனாரோவுக்கு, 49.1 சதவீத … Read more