தெலுங்கு தேசம் மாஜி எம்.எல்.ஏ.,வின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்| Dinamalar

புதுடில்லி :காலாவதியான வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற வழக்கில், தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.,வின் 22 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுகுறித்து, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், ‘பி.எஸ்., 4’ இன்ஜின்களுடன், 2017க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்க, உச்ச நீதிமன்றம் 2017ல் தடை விதித்தது. இந்த வகை வாகனங்கள் காலாவதியானவை எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆந்திராவின் தாதிபத்ரி தொகுதியில், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வாக இருந்த பிரபாகர் ரெட்டி, … Read more

சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' – முதல் பார்வை வெளியீடு

சசிகுமார் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களில் ‛நான் மிருகமாய் மாற, காரி' என இரண்டு படங்கள் வெளியாகின. அடுத்து ‛நந்தன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதை 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கி உள்ளார். சசிகுமார் ஜோடியாக 'பிக் பாஸ்' புகழ், நடிகை சுருதி பெரியசாமி நடிக்க, இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் … Read more

மதரசாவில் குண்டு வெடிப்பு 10 மாணவர்கள் பரிதாப பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், ௧௦ மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் இஸ்லாமிய மதக் கல்வி போதிக்கப்படும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், ௧௦ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. … Read more

சென்னை மாதாவரத்தில் பள்ளி சிறுவர்களை தாக்கிய ஆசிரியர் கைது.!

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு, அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள பகுதியில் சிறுவர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் அழுதபடி சத்தம் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராமுக்கு தகவல் அளித்தனர்.  இந்த தகவலின் படி, உதவி கமிஷனர் ஆதிமூலம், மாதவரம் தலைமை காவலர் காளிராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் … Read more

பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை… ராபிடோ புக் செய்த பெண்ணை கூட்டு பலாத்காரம்..!!

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ராப்பிடோ வாகனத்தை புக் செய்தால் இரு சக்கர வாகனத்தில் வரும் நபர் புக் செய்த நபரை வாடகை இருசக்கர வாகனத்தில் குறைந்த வாடகையில் தேவையான இடத்தில் கொண்டு சென்று விட்டு விடுவார். ஆட்டோ கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களை விட இதில் குறைந்த வாடகை என்பதால் பலரும் இந்த செயலியை பயண்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000? – அரசு தீவிர ஆலோசனை: முதல்வர் விரைவில் அறிவிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு, தொகுப்புக்கு பதில் ரூ.1,000 ரொக்கம் வழங்கலாமா என தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்டவை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடர்ந்தது. அத்துடன், கூடுதலாக 2 அடி கரும்பு,ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது. முதலில் … Read more

புலி வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ரவீணா டாண்டன்: வன அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

நத்மதாபுரம்: நடிகை ரவீணா டாண்டன் (50) இந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். டி.வி நிகழ்ச்சிகள், வெப்தொடர்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார். பாலிவுட் படத்தையும் தயாரித்துள்ளார். தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமல்ஹாசனுடன் ‘ஆளவந்தான்’, கன்னடத்தில் யஷ் உடன் நடித்த ‘கேஜிஎஃப் 2’ படத்தின் தமிழ் டப்பிங்கிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த ரவீணா டாண்டன், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். … Read more

ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஹோண்டா கார்ஸ் ஒப்பந்தம்| Dinamalar

புதுடில்லி ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்கள் அதன் கார்களை, எளிமையான கார் நிதி திட்டங்கள் வாயிலாக வாங்குவதற்கு, ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் வழங்குவதுடன், கடனை திருப்பி செலுத்த, அதிகபட்ச கால அளவை வழங்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்கள் … Read more

ஸ்ரேயாவுக்கு காரை பரிசளித்த சித்து

சின்னத்திரை நடிகர்களான ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆன்ஸ்கீரினை போலவே ஆப் ஸ்கீரினிலும் இவர்களது கெமிஸ்ட்ரி ரொம்பவும் பிரபலம். சொல்லப்போனால் ரீலை விட ரியலில் இவர்கள் செய்யும் ரொமான்ஸ் மற்றும் குறும்புகளை பார்க்கவே சோஷியல் மீடியாவில் ஸ்ரேயா – சித்துவை பலரும் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடியுள்ள சித்து தனது காதல் மனைவி ஸ்ரேயாவுக்கு எஸ்யூவி வகையிலான சொகுசு காரை பரிசளித்து மகிழ்வித்துள்ளார்.

இடுக்கி அணையை காண இன்று முதல் அனுமதி| Dinamalar

மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று(டிச.,1) முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளன. இருஅணைகளிலுமாக சேர்ந்து தண்ணீர் தேங்கும். செருதோணி அணையில் தான் தண்ணீர் திறக்கும் ஷட்டர்கள் உள்ளன. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் … Read more