பள்ளிகள் திறந்து 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தொடங்கிய இலவச மாணவர் சிறப்பு பேருந்துகள்

புதுச்சேரி: பள்ளிகள் திறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் இலவச மாணவர் சிறப்பு பேருந்துகள் இன்று துவங்கியது. மதிய உணவுடன் முட்டை தரும் பணியும் துவங்கப்பட்டுள்ளது. மாணவர் சிறப்பு பேருந்துகள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் பள்ளிகளுக்கு பயணிக்கலாம். கிராமத்திலிருந்து நகரிலுள்ள பள்ளிக்கு படிக்க வரும் ஏழை மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெற்றனர். இரண்டு ரூபாய் மட்டுமே செலவிட்டனர். … Read more

13 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6ஆம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து … Read more

ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியர்; திரண்டு வந்த கிராம மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் நிலையில்,நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தமிழ் அமுதன் என்பவர் செயல்பட்டு வருகிறார். அவர் உள்ளாட்சி சட்ட விதிகளை மீறி நிதி மேலாண்மையை தவறாக கையாண்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவு … Read more

டேங்கர் லாரிமீது சொகுசு பேருந்து மோதல்: 4 பயணிகள் உடல் நசுங்கி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் கூட்டுச்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பனிமூட்டத்துக்கு இடையே ஒரு கெமிக்கல் டேங்கர் லாரி வெளிமாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை டிரைவர் சுப்பாராவ் ஓட்டி சென்றார். அவருடன் கிளீனரும் இருந்துள்ளார். அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், பள்ளத்தில் டேங்கர் லாரி ஏறி இறங்கியதில், அதன் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் ஒருபக்கமாக டேங்கர் லாரி சாய்ந்தது. அப்போது டேங்கர் லாரியின் பின்னால் … Read more

வங்கக்கடலில் உருவாகிறது புயல் – டிச. 7 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு … Read more

மீனவர்களே, கடலுக்கு போகாதீங்க.. பலத்த சூறாவளி காத்து வீசப்போகுது..!

மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நாளை (6-ம் தேதி) மாலை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து மேற்கு – … Read more

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் ‘சோப்தார்’ நியமனம்

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வது வழக்கம். இவர்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என … Read more

மூடப்படுகிறதா சத்துணவு மையங்கள்? தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை வரைபடங்களுடன் திரட்ட வேண்டும்; அவை அனைத்தையும் இன்று காலை 11 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஊராட்சி … Read more

திமுகவை வழிநடத்துவது அதிமுவின் அந்த 8 பேர் தான்; போட்டு தாக்கும் ஜெயக்குமார்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், ” எம்ஜிஆர் , ஜெயலலிதா இருவரும் அழிவில்லாத வாழ்வை பெற்றவர்கள். அதிமுகவில் எந்த பிரிவும் , பிளவும்  இல்லை. கட்சி விரோத நடவடிக்கையால்  ஓபிஎஸ் மற்றும் அவர்  சார்ந்த சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.   62 எம்எல்ஏக்கள் , 75 தலைமைக கழக … Read more