முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் – கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு

சென்னை: பேனா நினைவுச்சின்னம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது திமுகவினர் எதி்ர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சீமான், பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் … Read more

பொதுமக்கள் விருப்பத்தை பட்ஜெட் பூர்த்தி செய்யும் – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு நடுவிலும், பொதுமக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக மத்திய பட்ஜெட் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலையில் நாடாளுமன்றம் வந்தபிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டு நலனும், குடிமக்களின் நலனும்தான் முதல் என்ற குறிக்கோளுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதே தத்துவத்தை மையமாகக் கொண்டதாகவே மத்திய நிதியமைச்சர் … Read more

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை தாக்கியதால் உயிரிழப்பு – 7 போலீஸார் பணியிடை நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார். அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு … Read more

தேசிய கீதம் அவமதிப்பு எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில், கடந்த 28ம்தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சிவப்பிரகாசம்(47) எழுந்து நிற்காமல், சேரில் உட்கார்ந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ … Read more

ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: ஆன்லைனில்  பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அரசு பெண் டாக்டர் முன் வாலிபர்  நிர்வாண போஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு சுகாதாரத்துறை சார்பில் இ சஞ்சீவினி என்ற ஆன்லைன் பரிசோதனைத் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம்  பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பத்தனம்திட்டா  மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஒரு பெண்  டாக்டர் வழக்கம்போல நோயாளிகளுக்கு ஆன்லைன்  பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். … Read more

திருமண வயது வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்| Age of marriage case transferred to Supreme Court

புதுடில்லி,திருமணம் செய்வதற்கான வயது வரம்பை ஆண், பெண்ணுக்கு சீராக நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, புதுடில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுஉள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். ‘தற்போது ஆண்களுக்கான திருமண வயது, ௨௧ என்றும், பெண்களுக்கான திருமண வயது, ௧௮ என்றும் உள்ளது. இது பாலின சமத்துவத்துக்கு எதிராக உள்ளது. அதனால் இரு பாலினத்தவருக்கும் ஒரே சீரான … Read more

ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி. அப்போது ரசிகர் ஒருவர் அவர் அருகில் சென்று ‛லவ் யூ தலைவா' என்றார். இதற்கு … Read more

#ஈரோடு_கிழக்கு:: செருப்பு மாலையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்..!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று 4 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதான அரசியல் கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் செருப்பை மாலையாக … Read more