காலை 11.30 மணி நிலவரம்: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சியும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில்   வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி,  பாஜக 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  ஆம்ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.  காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை. ஆத்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட … Read more

கடலூர் அருகே தனியார் பள்ளி விடுதி கழிவறையில் மாணவி தூக்கிட்டு சாவு! கொலையா? தற்கொலையா?

கடலூர்: கடலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார்  பள்ளி  விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி ஒருவர்,  அங்குள்ள விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி‌ உள்ளது. இது தற்கொலை என கூறப்படும் நிலையில், மாணவியின் தாயார் கொலை என குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு கடலூர் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கியிருந்து … Read more

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' – கட்டளையிட்ட தலைமை… டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

தணிந்த ஏக்கம்..! டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதன் அத்தனை நகர்வுகளையும் முடிவு செய்யும் தலைநகர் டெல்லி எட்டாக் கனியாகவே இருக்கிறதே என்ற அவர்களது ஏக்கம் தணிந்திருக்கிறது இமாலய வெற்றியுடன் அக்கட்சி டெல்லி சட்டமன்றத்திற்குள் நுழைகிறது. அதற்குச் சமமான மகிழ்ச்சி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா என ஆம் ஆத்மி கட்சியின் அத்தனை முக்கிய … Read more

பாஜக: 48 – ஆம்ஆத்மி – 22, காங்கிரஸ் -0: டெல்லியில் ஆட்சி அமைக்கிறது பாஜக….

டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மும்முனை போட்டி கண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, மூன்றாவது  முறையாக எந்தவொரு தொகுதி யிலும்,  வெற்றிபெறாத நிலையில்,  பா.ஜ., 68 தொகுதிகளில் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி – நாதக உள்பட எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி

ஈரோடு:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றியை முதலமைச்சருக்கு சமர்பிப்பதாக  தெரிவித்து உள்ளார். திமுக வேட்பளாரை எதிர்த்து போராட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட அனைத்து  45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் பெற்றுஅமோக  வெற்றி பெற்றுள்ளார்.  நாதக வேட்பாளர், சீதாலட்சுமி டெபாசிட் இழக்காமல் இருக்க 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் 23,872 வாக்குகளே பெற்றுள்ளார். அதனால் சீதாலட்சுமி … Read more

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' – ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மொத்தமாக 140 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். `Together we grow’ என்ற திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் மூன்றாண்டு சேவை முடிந்ததும் அவர்களின் மொத்த ஆண்டு … Read more

11ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் விவரம்….

சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம்  முன்னிட்டு,   திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம்  வெளியிட்டு உள்ளது. தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் அருள் பெற்று வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் வீற்றிரும்,  மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் … Read more

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லியை கடந்த மூன்று வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியில்  70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்ற தொகுதி … Read more