The Kerala High Court rejected the Ariskomban case | அரிசிகொம்பன் வழக்கை நிராகரித்தது கேரளா ஐகோர்ட்

கொச்சி, அரிசிகொம்பன் யானையை தமிழகத்தில் இருந்து மீட்டு கேரளாவுக்குள் அழைத்து வந்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு உத்தரவிடக் கோரும் வழக்கை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரள வனப்பகுதியில் இருந்த அரிசி கொம்பன் யானை, அங்குள்ள கடைகள் மற்றும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்டு வந்தது. சமீபத்தில் இந்த யானை, தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் அந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதைஅடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. தற்போது படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது தம்பி அபிராம் முதன்முதலாக அஹிம்சா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. அதேபோல தெலுங்கு திரையுலகின் இன்னொரு இளம் நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவரின் தம்பி பெல்லம்கொண்டா கணேஷ் நடித்துள்ள … Read more

Sweden is the first non-smoking European country | புகைபிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாகும் ஸ்வீடன்

ஸ்டாக்ஹோல்ம் தினசரி புகைபிடித்தல் சதவீதம் குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் மாறுகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்துவதுடன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை இல்லா தினம் கடைப்பிடிப்படுகிறது. இந்த ஆண்டில், ‘உணவை அதிகரியுங்கள்; புகையிலையை அல்ல’ என்ற கருத்து பரப்பப்படுகிறது. இந்நிலையில், ஸ்வீடனில் தினசரி புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக அது விரைவில் மாற உள்ளது. … Read more

Rekha: மீண்டும் கதாநாயகியான கடலோர கவிதைகள் ரேகா.. பிக் பாஸுக்கு பிறகு பிரைட் ஃபியூச்சர் தான் போல!

சென்னை: கடலோர கவிதைகள், புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா 20 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். நடிகை ரேகா லீடு ரோலில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக போடப்பட்டுள்ளது. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ரேகா நடிக்க உள்ள இந்த படத்தில் அனிதா சம்பத்தும் … Read more

கோடை விடுமுறை முடிந்ததையொட்டி கர்நாடகத்தில் அரசு பள்ளிகள் திறப்பு

பெங்களூரு: ஆர்வமாக வந்தனர் கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த கோடை விடுமுறை முடிவடைந்ததை அடுத்து அரசு பள்ளிகள் மாநிலம் முழுவதும் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து பல்வேறு இடங்களில் குழந்தைகளை வரவேற்க பூக்கள், தோரணங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா தேவனஹள்ளியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளை சாக்லெட், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அந்த குழந்தைகளுக்கு சீருடையும் … Read more

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து தோல்வி

பாங்காக், தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் தடையை கடக்க முடியாமல் பணிந்தார். அவர் 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செலியிடம் தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நீடித்தது. 12-வது முறையாக மிட்செலியிடம் மோதிய சிந்து அதில் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இந்த … Read more

ரஷியாவுக்கு பதிலடி,,, ஜெர்மனியில் 4 ரஷிய தூதரகங்களை மூட அரசு முடிவு

பெர்லின், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியபோது, அதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றில் ஜெர்மனியும் ஒன்று. இதனை தொடர்ந்து, ரஷியாவின் எரிவாயு இறக்குமதியை நிறுத்தியது. ரஷியாவுக்கு எதிரான சர்வதேச தடைக்கு ஆதரவு அளித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை ரஷியா மீது விதித்தன. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது. எனினும், போரானது ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதன்பின், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் … Read more

மேகதாது அணை கட்டும் முடிவு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் : பி.ஆர். பாண்டியன்

மேகதாது அணை கட்டும் முடிவு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் : பி.ஆர். பாண்டியன் Source link

நில பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது.!

நில பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது.! சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ந் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று  அளித்துள்ளார். அந்த புகாரில், கொரட்டூரில் தனக்கு 78 சென்ட்  பூர்வீக சொத்து உள்ளது. இதனை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரை அணுகினேன்.  ஆனால், இந்த நிலத்தை விற்பது தொடர்பாக … Read more

 தஞ்சாவூர் | அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையரைக் கண்டித்து திமுக மாவட்ட பொருளாளர் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் ஒருதலைபட்சமாக செயல்படுவதைக் கண்டித்து, தஞ்சாவூர் தி.மு.க தெற்கு மாவட்டப் பொருளாளர் அஸ்லம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த தாஹிரா அப்துல் கரீம் பதவியுள்ளார். முன்னாள் நகராட்சித் தலைவரும், தஞ்சாவூர் திமுக தெற்கு மாவட்ட பொருளாளரான அஸ்லம் உள்ளார். இவரது மனைவி ஆயிஷா 2-வது வார்டு உறுப்பினராக உள்ளார். கடந்த மே.19-ம் தேதி தனது வார்டுக்கு … Read more