புதிய கால அட்டவணை – தெற்கு ரயில்வே வெளியீடு

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், புதிய ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வோர் ஆண்டும் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 11 ரயில்கள், 8 ரயில்கள் பயணிக்கும் தொலைவு நீட்டிப்பு, இரண்டு ரயில்களின் சேவை அதிகரிப்பு, 199 விரைவு ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் … Read more

புவிக்கு அப்பால் 9.2 லட்சம் கி.மீ.தொலைவில் ஆதித்யா விண்கலம்: சூரியனின் எல் 1-ஐ நோக்கி சீரான பயணம்

சென்னை: ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு முழுமையாக விடுபட்டு, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் செல்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் … Read more

கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமானது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.  அவருக்குப் புதுவை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது.  மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மாணவரை சேர்க்க நிறுவனம் மறுப்பு தெரிவித்தது மிகவும் அதிர்ச்சியை அளித்தது. மாணவர் சித்தார்த்தன் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தவில்லை என் நிறுவனம் தரப்பில் காரணம் கூறப்பட்டது.  பிறகு … Read more

ரயில் மறியல் 3வது நாளாக நீடிப்பு | Rail strike continues for 3rd day

சண்டிகர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பஞ்சாபில் விவசாயிகள், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் பஞ்சாபில் பெய்த கனமழைக்கு, பயிர்கள் சேதமடைந்ததன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தும், இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து, பல்வேறு விவசாய அமைப்பினர் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு, விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் ரயில் … Read more

டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், கிர்த்தி சனோன், அமிதாப்பச்சன், ரகுமான், ஸ்ருதி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்பத். விகாஸ் பாகி என்பவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் அக்டோபர் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் டீசரை நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த … Read more

Sunny Leone: காவாலா பாட்டுக்கு கன்னா பின்னாவென நடனமாடும் சன்னி லியோன்.. என்ன கேப்ஷன் தெரியுமா?

சென்னை: ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு நடிகைகள் முதல் ஏஐ வரை நடனமாடிய நிலையில், இன்னமும் அந்த ஃபீவர் குறையவில்லை. நடிகை சன்னி லியோன் தற்போது அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன்

கர்நாடகத்தில் சட்டத்தை கையில் எடுப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – சித்தராமையா

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரீஸ் நல்லிணக்க பவன் கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:- மனித நேயம் இல்லையென்றால்… நமது நாடு மதசார்பற்றது. இங்கு வாழ்பவர்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பரஸ்பர நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். நம்பிக்கை, மனித நேயம் இல்லையென்றால், நாட்டில் அமைதி, நிம்மதி இல்லாமல் போய் விடும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனதாதளம் … Read more

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி பாதியில் கைவிடப்பட்டது

திருவனந்தபுரம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் இந்த ஆட்டம் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 55 ரன்னும், கேமரூன் கிரீன் 34 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் … Read more

உக்ரைனின் 9 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா

ரஷியா-உக்ரைன் போர் 20 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் பெரும் தோல்வியை சந்தித்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளால் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர். அந்தவகையில் ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 9 உராகன் எம்.எல்.ஆர்.எஸ். டிரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதன்மூலம் உக்ரைனின் … Read more

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி, இபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல், காவல் துறை மரியாதையுடன் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98), கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். கோதுமை உற்பத்தி அதிகரிப்பிலும், புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலில் இந்தியா தன்னிறைவு அடைந்ததிலும் … Read more