‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

வாஷிங்டன்: உலகின் ‘நம்பர் 1’ பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க்கை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு ‘அது குறித்து பார்க்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் என இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தரப்புக்கு நேரடியாக உதவி இருந்தார் மஸ்க். அந்த நட்புறவு அண்மையில் முறிவுக்கு வந்தது. அமெரிக்க அரசு … Read more

Air India மீது வழக்கு? விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் தீவிர ஆலோசனை

Ahmedabad Plane Crash Latest Update: அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தில் மொத்தம் 274 பேர் இறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர் மோகல் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்

நய்பிடாவ், மியான்மரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.92 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை 1 More update … Read more

உக்ரைன் வந்த ஜெர்மனி மந்திரி; ராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி

கீவ், நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன. இதன்மூலம் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்தவகையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கும் 2-வது பெரிய நாடு ஜெர்மனி. அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஜோஹன் வடேபுல் அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் … Read more

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

வாஷங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், நேற்று (ஜூன் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அமெரிக்கா எவ்வாறு கருதுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கரோலின் லீவிட், “ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் … Read more

காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: உணவு தேடி வந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 74 பேர் பலியான சோகம்

கெய்ரோ, ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காசா பக்கம் திருப்பி உள்ளது. வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் உடனடியாக மொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்க இருப்பது தெளிவாகிறது. இந்த பின்னணியில், காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் … Read more

தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமரை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்

பேங்காக்: கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டு ராணுவத் தளபதி குறித்து விமர்சித்துப் … Read more

பாகிஸ்தான்: பருவமழைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், கடந்த 24 மணிநேரத்தில் 11 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் 57 பேர் காயமடைந்தனர். இதனை மாகாண பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பழைய கட்டிடங்கள் மற்றும் அவற்றை மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றி இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதில், … Read more

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: படுத்தே விட்ட பாகிஸ்தான்… கெஞ்சினாலும் உறுதியாக இருக்கும் மோடி அரசு!

Indus Water Treaty: பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிடம் அதனை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறது.

டிரம்பை நேசிக்கிறோம்; பாலஸ்தீனிய மக்கள் கோஷம் – காரணம் என்ன?

வாஷிங்டன் டி.சி., காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும், நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீது … Read more