காமன்வெல்த் – இந்தியாவுக்கு 3வது தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார். இந்த பதக்கம் மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பீதி அடைய தேவையில்லை தனியார் விமானங்கள் மிக பாதுகாப்பானவை: டிஜிசிஏ இயக்குநர் உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் தனியார் விமானங்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் செயல்படும் தனியார் விமான நிறுவனங்களின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 45 நாட்களில் அதிகமானது. இதையடுத்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனங்களுக்கு நேரில் சென்று அதிரடியாக சோதனை நடத்தியது. இதில், விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை தகுதியற்ற பொறியாளர்கள் அளித்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அனைத்து விமான நிறுவனங்களிலும் தணிக்கை நடத்த … Read more

இறந்த கணவரின் சொத்து உரிமை கோரும் 2 பெண்கள்| Dinamalar

சிக்கபல்லாபூர் : இறந்த கணவரின் சொத்துக்காக, இரண்டு மனைவியர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். இருவரிடமும் ஆவணங்கள் இருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.சிக்கபல்லாபூர், நந்தி பேரூராட்சியின் சிக்கனஹள்ளி கிராமத்தில் வசித்த நெனகப்பாவுக்கும், ஜெயலட்சுமிக்கும் 1985ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், நெனகப்பா இறந்து விட்டார்.அவரது சொத்துகளை பெறும் நோக்கில், திருமண அழைப்பிதழ், கணவரின் இறப்பு சான்றிதழ் உட்பட, தேவையான ஆவணங்களுடன், ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கு, இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவருக்கு … Read more

பழைய யுவன் வேணும் என கேட்ட இயக்குனர்

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவானா நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ‛சாச்சிட்டாலே' என்னும் முதல் பாடல் நாளை … Read more

இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட் உதிரி பாகங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவால் விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டின் உதிரி பாகங்கள், இந்திய பெருங்கடலில் நேற்று விழுந்தன. சீனா, விண்வெளியில் ‘டியாங்காங் – -1’ என்ற ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை, ‘லாங் மார்ச் 5பி’ என்ற 23 டன் எடை உடைய ராக்கெட் வாயிலாக விண்வெளிக்கு கடந்த வாரம் அனுப்பியது. இந்த ராக்கெட், செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. இருப்பினும், செயற்கைக்கோள் விரும்பிய … Read more

வெற்றியை குவித்த இந்திய செஸ் வீரர்கள்..!

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ஆவது நாளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக வெற்றிகளை குவித்தனர். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ஆம் நாளில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏ,பி,சி என 3 பிரிவுகளில் களம் இறங்கினர். ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் தங்களை எதிர்த்து விளையாடிய சுவிட்சர்லாந்து அணி வீரர்களான யான்னிக் மற்றும் நிகோ ஆகியோரை வீழ்த்தினர். அதே பிரிவில் … Read more

பழநியில் நள்ளிரவில் பூத்த பிரம்மகமலம் மலர்: ஒரே செடியில் 8 பூக்கள் பூத்த அதிசயம்

பழநி சன்னதி சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் செடியில் நேற்று 8 பூக்கள் பூத்தன. பிரம்மகமலம் பூவின் சிறப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் மட்டுமே பூக்கும். பழநி சன்னதி சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் கண்காணிப்பாளர் ராஜா. தனது வீட்டில் பல்வேறு மூலிகைச் செடிகள், காய்கறி செடிகள் வளர்த்து வருகிறார். இதில் பிரம்மகமலம் செடியும் வளர்க்கிறார். பிரம்மகமலம் பூவின் … Read more

தாயார் இறந்ததை பேஸ்புக் பக்கத்தில் தெரிந்து கொண்ட மகன்: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் தாயார் இறந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பொதுமக்களில் யாரோ பதிவிட்டதில் இருந்து தெரிந்து கொண்டதாக கூறி அவரது மகன் கடும் வேதனையடைந்துள்ளார். நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியை சேர்ந்த 75 வயது கில்லன் என்பவரே தெருவில் சுருண்டு விழுந்து மரணமடைந்தவர். இந்த நிலையில் தமது தாயாரிடம் இருந்து வழக்கமான தொலைபேசி அழைப்புகள் எதுவும் இல்லை என தவித்துப் போயுள்ளார் 52 வயதான கெவின் சிம்சன். கில்லன் மரணமடைந்து மூன்று நாட்களுக்கு பின்னர் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதாகவும், அவருடன் காணப்பட்ட … Read more

பீகார் பல்கலை.யில் அதிர்ச்சி 100-க்கு 151 மார்க் எடுத்த மாணவன்: ‘0’ எடுத்தவர் பாஸ்

தர்பங்கா: பீகார் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் தேர்வில் 100-க்கு 151 மதிப்பெண்கள் ஒரு மாணவன் பெற்றதாகவும், பூஜ்யம் எடுத்த மற்றொரு மாணவர் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டதாகவும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக் கழகத்தின் (எல்என்எம்யு)  பி.ஏ (ஹானர்ஸ்) இளங்கலை மாணவர் ஒருவர், பல்கலைக் கழகத்தின் பகுதி-2 தேர்வில் அரசியல் அறிவியல் தாள் – 4ல் 100க்கு 151 … Read more

அட்டைப்படத்திற்கு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா!

பிரபல யூ-டியூப் என்டர்டெயின்மென்ட் ஊடகம் ஒன்று புதிதாக 'ஷோ ரீல்' என்ற பெயரில் பேஷன்/சினிமா இதழ் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போட்டோஷூட் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. முதல் எடிஷனுக்கான அட்டைபடத்தில் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா மாடலாக போஸ் கொடுக்கின்றனர். அதற்கான போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மற்றொரு அட்டைப்படத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவின் … Read more