Deadline for PM Award nominations is Feb. 12 | பிரதமர் விருது பரிந்துரை பிப்., 12 வரை அவகாசம்

புதுடில்லி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரதமர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள அரசு ஊழியர்கள் செய்த சிறப்பான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரித்து, பிரதமர் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த, 2023ம் ஆண்டிற்கான இந்த விருதுகளை பெற விண்ணப்பிக்க, பரிந்துரை செய்வதற்கான இறுதி நாளாக ஜன., 31 அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை பிப்., 12 வரை நீட்டித்து மத்திய அரசு … Read more

தனுஷ் அடுத்த படத்தின் தலைப்பு தாராவியா?

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்காலிகமாக DNS என அழைக்கின்றனர். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் … Read more

100 கோடி, 200 கோடி சம்பளம்.. தெலுங்கு தயாரிப்பாளர்களை விஜய், அஜித் தேடி ஓட இதுதான் காரணமா?

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர்களை வாழ வைக்க முயற்சி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்

புதுடெல்லி, செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பேட்டரி கவர், முன்பக்க, நடுப்பக்க, பின்பக்க கவர், மெயின் லென்ஸ், ஸ்க்ரு, சிம் சாக்கெட் ஆகியவற்றுக்கு 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வரியை 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டு செல்போன் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பெருக்கவும், இந்திய சந்தையில் செல்போன் விலையை கட்டுப்படுத்தவும் … Read more

புரோ கபடி லீக்; : பாட்னா பைரேட்ஸ் – பெங்களூரு புல்ஸ் போட்டி 'டிரா '

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பாட்னாவில் … Read more

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவியேற்பு

கோலாலம்பூர், மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மலேசியாவின் பிற தலைவர்கள் முன்னிலையில், சுல்தான் இப்ராகிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பதவி பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார். அதே சமயம் நாட்டின் துணை தலைவராக பேராக் மாகாணத்தின் ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

109 ஆண்டுகளாக செயல்படும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை முடக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு

மதுரை: ”109 ஆண்டுகளாக செயல்படும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலலை முடக்கப் பார்க்கிறார்கள்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் மருத்துவர்கள் தேர்தலில் வாக்களித்து எனது தலைமையில் 7 உறுப்பினர்களை தேர்வு செய்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அமைப்பு செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கு ஒரு முறையும் தேர்தல் மூலம் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தேர்வு … Read more

2024 மக்களவைத் தேர்தல் | நிதிஷ் மறுவருகை – என்டிஏ கூட்டணியில் ஜேடியு ஓங்குமா, ஓரங்கட்டப்படுமா?

புதுடெல்லி: இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் என்டிஏவில் இணைந்துள்ளார். இவரது வரவால் பிஹாரில் இருவருக்குமே லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மீண்டும் தன்னுடன் இணைந்தமையால் பாஜக பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ) பாஜகவே தலைமை ஏற்று, அக்கட்சியின் கைகள் ஓங்கும் சூழல் நிலவுகிறது. பிஹார் தேர்தல் கணக்குகள்: கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக, ஜேடியு மற்றும் லாலுவின் … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக்? அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் துன்புறுத்தல்…

2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டுகளை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் இவர்களை துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள், போலீசார் தங்களை கொடுமைப்படுத்தினர், வெற்றுத் தாளில் கையெழுத்திட நிர்பந்தித்தனர் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மேலும், “சமூக வலைதள கணக்குகள், இமெயில், செல்போன்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை … Read more

Hindus are allowed to worship in the basement of the Gnanawabi campus | ஞானவாபி வளாக பாதாள அறையில் ஹிந்துக்கள் வழிபட அனுமதி

வாரணாசி, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் ஹிந்து பூஜாரியின் குடும்பத்தார் வழிபாடு செய்வதற்கு, மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது இந்த வளாகம் கட்டப்பட்டதால், அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையும் … Read more