ஓடும் ரயிலில் உயிருக்காக கெஞ்சிய திருடன்! வைரல் வீடியோ

பீகார் மாநிலத்தில் ஜாமல்பூர்-சாகிப்காஞ்ச் பயணிகள் ரயில் லைலாக் பகுதியில் சென்ற போது, ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு பயணியிடமிருந்து செல்போனை திருடன் பறிக்க முயன்றுள்ளார். அப்போது பயணி திருடனின் கையையும், பணியனையும் லாவகமாக பிடிக்க ரயில் வேகமாக செல்ல தொடங்கியிருக்கிறது. வெளியே தொங்கிய திருடன் தன்னை காப்பாற்றுமாறும் தனது கைகளை விட்டுவிட வேண்டாம் என்றும் கொஞ்சி உள்ளார். இதை மற்ற பெரெத்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். ஆத்திரமடைந்த … Read more

விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, நேற்று அவர்வெளியிட்ட செய்தி: ரத்த தானம் மூலம், விலை மதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் முதல்நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய … Read more

முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புதுடெல்லி: தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ‘இசட் பிளஸ்’ என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான … Read more

இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கர்நாடகாவில் ராகுல் ஆவேசம்

பெங்களூரு: ‘இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நான் மேற்கொண்டுவரும் பாதயாத்திரையை  எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ம் தேதி குமரியில் பயணத்தை தொடங்கிய அவர், தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் நடை பயணம் செய்து வந்தார். நேற்று அவர்  சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் வழியாக கர்நாடகாவில் நுழைந்தார். அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் … Read more

தேசிய சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி, :பார்லிமென்டில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய சின்னத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், தேசிய நினைவுச் சின்னம் சமீபத்தில் நிறுவப்பட்டது. 19.6 அடி உயரமும், 9,500 கிலோ எடையும் உடைய, சிங்கம் மற்றும் அசோக சக்கரத்துடன் கூடிய இந்த தேசிய சின்னத்தை, பிரதமர் மோடி கடந்த ஜூலையில் திறந்து வைத்தார்.இந்நிலையில், புதிதாக நிறுவப்பட்ட தேசிய சின்னம், ஏற்கனவே இருந்ததை விட வடிவத்தில் மாறுபட்டு … Read more

'ஆதி புருஷ்' புதிய போஸ்டர், ராமர் ஆக பிரபாஸ்

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோனன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படம் 2023ம் வருடம் ஜனவரி 12ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அக்டோபர் 2ம் தேதியன்று அயோத்தியில் சரயு நதிக் கரையில் நடைபெற உள்ள விழாவில் வெளியிடப்பட உள்ளது. டீசர் வெளியீட்டிற்கான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில் ராமர் … Read more

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் முறைப்படி ரஷ்யாவுடன் இணைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ் : உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியாவை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது. இந்த பிராந்தியங்கள் … Read more

ஓபிஎஸ் வழக்கை விசாரித்து முடிக்கும்வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் அரசு வேலை – பிஹாரின் ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞன்

பிஹார்: பிஹார் மாநில கிராமம் ஒன்றில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததை அந்த கிராமமே ஒன்றாக கொண்டாடிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்துபிறகு அந்த கிராமத்தில் இருந்து அரசு வேலைக்கு தேர்வாகியுள்ள முதல் நபர் அவர் என்பதாலேயே கிராமமே சேர்ந்து கொண்டாடுவதன் பின்னணி. பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் தான் 75 ஆண்டுகளில் முதல் நபராக அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். 25 வயதாகும் ராகேஷ், தனது … Read more

அத்திமரப்பட்டி – குலையன்கரிசல் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி

ஸ்பிக்நகர்: அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல், கூட்டாம்புளி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை, கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் பல பகுதிகளில் புழுதிகள் பறப்பதால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். மழை நேரங்களில் சகதிகாடாக … Read more