பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று (ஏப்.29) தீர்ப்பளித்தது. அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, … Read more

“பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது” – ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: “காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை. பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பேசிய பிரதமர், நாட்டின் வளங்களில் பட்டியலின, பழங்குடியின, ஓபிசி மற்றும் ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்றார். … Read more

சென்னை மெட்ரோ ரயில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை மே தினத்தையொட்டி நாளை சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்க உள்ளது. உலகெங்கும் நாளை மே தினம் கொண்டாடப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினமாகும். எனவே சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் … Read more

செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் அவரது வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அமரன் படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டு … Read more

நடிகர் ஜெய்க்கு கல்யாணம் ஆகிடுச்சா?.. கழுத்தில் தாலியுடன் இருக்கும் அந்த பெண் யார்?

சென்னை: 40 வயதாகும் நடிகர் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புதிய வாழ்க்கை தொடக்கம் என ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பெண் கழுத்தில் புது தாலியுடன் போட்டோ இருப்பதால் நடிகர் ஜெய்க்கு திருமணம் ஆகிவிட்டதா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.  1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு … Read more

‘பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட்டதில்லை’ – பிரதமர் மோடி

மத் (மகாராஷ்டிரா): “60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கும் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் வறுமையை ஒழிப்பதைப் பற்றி பேசினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து நான் மீட்டுள்ளேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உங்களின் அன்பே எனது பலம். … Read more

தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த வாலிபர் கைதூ

தேனி தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமிறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி … Read more

சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார்

'சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராதா. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ராதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் பக்கத்து வீட்டு வாலிபருடன் ஏற்பட்ட தகராறில் சாலையில் நடந்து சென்ற அவரை தனது மகனுடன் சேர்ந்து தாக்கியதாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதுபோன்ற ஒரு புகார் இப்போதும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு : சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த … Read more

சங்கடத்தில் ஷங்கர்.. இந்தியன் 2 பிசினஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம்?.. பெரிய மேஜிக் நடக்குமா?

சென்னை: இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் தூண்டப்படவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மையாக உள்ளது. டோலிவுட்டில் கல்கி, புஷ்பா 2 படங்கள் இந்த ஆண்டு