நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – ஹர்ஷ டி சில்வா கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி புதிய அணியொன்றுக்கு நாட்டை மீட்டெடுக்க இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் தமது பிரிவினர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான பணம் அச்சடிக்கப்பட்டதன் விளைவுகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடனை … Read more

கழிவறை நீரில் இருந்து பீர் : செம டேஸ்ட் என குடிமகன்களிடம் வரவேற்பு

சிங்கப்பூரில், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட கழிவறை நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிங்கப்பூர் அரசு ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் உள்ள அசுத்தமான துகள்களை அகற்றி, பின் புற ஊதாகதிர்வீச்சின் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழித்து, இறுதியாக சுத்திகரிக்கப்பட்ட நீரை நியூவாட்டர் என்ற பெயரில் விற்பனை செய்தது. அந்த நியூவாட்டரை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நியூபுரூ  என்ற பீர் வகை குடிமகன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. … Read more

கோவில் திருவிழாவின் போது ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங்.. டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் காயம்..!

கர்நாடகா மாநிலம் சமக்கிரி கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது சிலர் ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங் சாகசம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.  பிரம்மலிங்கேஸ்வரா கோவில் திருவிழாவை காண ஏராளாமான மக்கள் வந்திருந்தனர். அங்கு சாலையில், டிராக்டரின் முன் சக்கரங்களை தூக்கியவாறு, பின் சக்கரங்களில் டிராக்டரை இயக்கி சிலர் சாகசம் செய்தனர். அப்போது, வீலிங் ஆன டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதில் 10பேர் காயமடைந்தனர் Source link

சுகேஷ் சிறை மாற்ற வழக்கு; உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு வாங்கித்தர தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், டெல்லியில் இருக்கும் தன் மீதான அனைத்து முறைகேடு வழக்குகளையும் கர்நாடகா அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். திகார் சிறையில் இருக்கும் … Read more

தேர்தல் பத்திரங்கள் இன்று வெளியீடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்கள், இன்று வெளியிடப்படுகின்றன. அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு, 2018ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு மட்டும், தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதுவரை, 20 முறை மத்திய அரசின் ஒப்புதலுடன் … Read more

தமிழில் வெளியாகும் கன்னட படம்

கன்னட இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் … Read more

சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் பீர்| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட ‘பீர்’ மதுபானம், ‘குடி’மகன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால், அண்டை நாடான மலேஷியாவில் இருந்து, குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து, ‘நியூவாட்டர்’ என்ற பெயரில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தவிர, உப்பு நீரும் குடிநீராக மாற்றப்படுகிறது.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த புருவெர்க்ஸ் நிறுவனம், நியூவாட்டரை பயன்படுத்தி, பீர் மதுபானம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more

பிரெஞ்ச் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது… வேற லெவலில் இந்திய ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் டெல்லியை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் நடந்த போட்டி ஒன்றில் பிரெஞ்ச் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவதாகவும் சர்வதேச கவனத்தைப் பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ட்ரோன் லைட் ஷோ டெல்லியில் ஐஐடியில் படித்த … Read more

‘உங்கள் கடிதம் செல்லாது’: ஓ.பி.எஸ்-க்கு பதில் கடிதம் அனுப்பிய இ.பி.எஸ்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஒவ்வொரு நாளும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஜூன் 14 ஆம் தேதி முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் புயலாக வீசி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நாளுக்கு நாள் வலுத்து … Read more

அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? தமிழக அரசின் புதிய முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கும் இச்செயலை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. கல்வியையும், சுகாதாரத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்களின் உயிரைப் பறிக்கும் மதுவை அரசே விற்பனை செய்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் அமைவிடம், எண்ணிக்கை தொடர்பான … Read more