விஜய் ஆண்டனியின் ‛பிச்சைக்காரன்-2' ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ்!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன். இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன்-2 படத்தை தானே இயக்கி, இசையமைத்து, எடிட்டிங் செய்து நாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் அவருடன் காவியா தபார், யோகி பாபு, ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த பிச்சைக்காரன்-2 படத்தின் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, இப்படம் மூளை மாற்று அறுவை சிகிச்சையால் … Read more

#BigBreaking | திருச்சி லால்குடி அருகே 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு!

லால்குடி அருகே 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அருகே உள்ள நான்கு கிராமங்களில் மார்ச் 8 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லால்குடி அடுத்த மங்கம்மாள்புரம், ஜங்கமா ராஜபுரம், கீழன்பில், அன்பில் ஆகிய நான்கு கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு  பிறப்பித்துள்ளார். மேற்கண்ட இந்த நான்கு கிராமங்களில் மோதல் ஏற்படும் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜங்கம ராஜாபுரம் ஆச்சிரம வள்ளி அம்மன் கோவில் மாசி … Read more

“உரிய இழப்பீட்டை வழங்கிய பிறகே நிலங்களை கையகப்படுத்தலாம்” – அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

சென்னை: அரசு நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, உரிய இழப்பீட்டை வழங்கிய பின்னர் நிலங்களை கையகப்படுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு வண்டலூர் பகுதியில் ஜிஎஸ்டி சாலை மற்றும் மீஞ்சூர் – கல்கத்தா நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ஒரு சென்ட்டுக்கு 1,150 ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதல் இழப்பீடு கோரி நில உரிமையாளர்கள் … Read more

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா – சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தரும் விலகல்

புதுடெல்லி: ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, 9 மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை … Read more

சுற்றி வளைக்கும் ரஷ்ய படைகள்: முக்கிய தளபதியை பணிநீக்கம் செய்து ஜெலென்ஸ்கி உத்தரவு

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிரான போரை வழிநடத்தி வந்த மூத்த இராணுவ தளபதி எட்வார்ட் மொஸ்கலியோவை பணிநீக்கம் செய்வதாக ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். கிழக்கு பகுதியில் தீவிரமடையும் போர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 1 வருடத்தை தாண்டி இருக்கும் நிலையில், டான்பாஸை உருவாக்கும் உக்ரைனின் இரண்டு கிழக்கு பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரமாக முயன்று வருகின்றனர் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தார். மேலும் சமீபத்திய வாரங்களில் நாட்டின் கிழக்கு பகுதியில் இராணுவ … Read more

ஜிஎஸ்டி மாடலில் மாற்றம் தேவை தமிழ்நாட்டிற்கு ரூ.7,000 கோடி நிலுவை தொகை பாக்கி: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

கோவை: ‘தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.7 ஆயிரம் கோடி வர வேண்டி உள்ளது. ஜிஎஸ்டி மாடலில் மாற்றம் தேவை’ என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கோவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டி: ஜிஎஸ்டியை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மேலாக ஒன்றிய அரசிடமிருந்து நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. மார்ச் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி 2020-21க்கான நிதி ஆகும். இது தவிர, மேலும் ரூ.3000 … Read more

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழி பாடம் தேர்ந்தெடுத்தவர்கள் திணறல்: மறைமுகமாக இந்தி திணிப்பு?

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் கியூட் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வான மாணவர்கள் புதிய மொழி கற்கலாம் என தமிழ், தெலுங்கு மொழிப் பாடத்தை தேர்வு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் நாடு முழுவதும் அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு, தேசிய தேர்வு முகமை நடத்தும் கியூட் தேர்வு கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டது இந்த கியூட் தேர்வை எழுதி முதல் பேட்ச் மாணவர்கள் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் புதிய தேசியக் கல்விக் கொள்கைபடி, கட்டாயப் பாடத்துடன், … Read more

ரூ.1 கோடி கேட்டு ரூபா மீது ரோகிணி மானநஷ்ட வழக்கு| Rohini defamation case against Rupa for Rs.1 crore

பெங்களூரு :ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவிடம் 1 கோடி ரூபாய் கேட்டு, ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி, மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அறநிலையத்துறை கமிஷனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, 39, மீது, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, 47, தன் முகநுால் பக்கத்தில் 19 குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிட்டு மாநிலத்தையே அதிர வைத்தார்.இருவரின் பகிரங்க மோதலால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருவரும் … Read more

இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா நெகிழ்ச்சி

நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத்குமார், சம்பத் ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தற்போது … Read more