என் பர்சனல் விஷயத்தில் தலையிட கங்கனாவுக்கு உரிமை இல்லை : நவாசுதீன் சித்திக் மனைவி காட்டம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணத்துக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்துக் கொண்டே வருவார். அதேசமயம் ஒருவரை பிடித்து விட்டது என்றால் அவர்கள் பின்னணியில் என்ன சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கி விடுவார். அப்படித்தான் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகிற்கும் அவரது மனைவி ஆலியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விவாகரத்துக்கான விண்ணப்பிப்பு இதெல்லாம் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் … Read more

Maamannan: பகத் ஃபாசில் கேரக்டர் நிஜ வாழ்க்கையில் யார் தெரியுமா? கிளம்பிய பூகம்பம்.. உதயநிதி ரியாக்‌ஷன்!

சென்னை: மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏகப்பட்ட தீயை சைலன்ட்டாக பற்ற வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என பலரும் க்ளைம் செய்து வர, அப்போ சேலத்தில் மாவட்ட செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தான் வில்லன் பகத் ஃபாசிலா என்கிற கேள்வி கிளம்பி உள்ளது. மாமன்னன் படம் அதிமுகவின் அடையாளமாக உருவாகி உள்ளது என சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த அதிமுகவினருக்கு ஆப்பு வைக்கும் விதமாக … Read more

பட்டுக்கோட்டையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கஞ்சித் தொட்டி போராட்டம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தங்களை, ஒப்பந்தப் பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் டெண்டர் முறையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணியின்போது தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய விகிதத்தை உயர்த்தி மாதந்தோறும் 3-ம் தேதிக்குள் தங்களுக்கு வழங்க … Read more

உ.பி.யில் அரசு பேருந்துகளை இயக்க 17 பெண் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

புதுடெல்லி: உத்தர பிரதேச அரசு பேருந்துகளை இயக்க 17 பெண் ஓட்டுநர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பாஜக ஆளும் உ.பி. மாநில அரசின் சாலை போக்குவரத்து கழக (யுபிஎஸ்ஆர்டிசி) ஓட்டுநர் பயிற்சி நிலையம் கான்பூரில் உள்ளது. இங்கு பேருந்துகளை பராமரிக்க மெக்கானிக் மற்றும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அசோக் லேலண்ட் மற்றும் டாடா நிறுவன பொறியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுவரை, 460 மெக்கானிக்குகளும், 2,393 ஓட்டுநர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 17 பெண்களுக்கும் கடந்த … Read more

ஸ்டாலினுக்கு அண்ணாமலை வைத்த செக்… அப்போ அப்படி சொன்னீங்க? ஆதாரத்துடன் கிடுக்கிப்பிடி!

அதிமுக ஆட்சியின் போது விஜயபாஸ்கருக்கு எதிராக ஸ்டாலின் பதிவிட்ட டிவிட்டை வைத்து விளாசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.​​தமிழக அரசு அரசாணைஇதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்ற பரிந்துரையை ஏற்கவில்லை. … Read more

கன்னட இசையமைப்பாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு

நடிகர் யோகிபாபுவின் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. மாவீரன், ஜெயிலர், அயலான் என அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த நிலையில் முதன்முதலாக கன்னட இசையமைப்பாளர் சுராக் என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. பிரபல கன்னட இசையமைப்பாளரும் இயக்குனருமான சாது கோகிலாவின் மகன் தான் இந்த சுராக். ஆனாலும் இந்த படம் தமிழில் தான் உருவாகி வருகிறது. அதன் பின்னர் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். சென்னையில் நடைபெற்று … Read more

Heat wave kills 112 in Mexico | மெக்சிகோவில் 112 பேர் பலி * வெப்ப அலை

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் வெப்ப அலை காரணமாக, நடப்பு ஆண்டில் இதுவரை, 112 பேர் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், முன்னெப்போதும் இல்லாத வகையில், நாடு முழுதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. தலைநகர் மெக்சிகோ சிட்டி உட்பட பல பகுதிகளில், 45 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், பல நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கொளுத்தும் வெயிலால், வீடுகளுக்குள்ளேயே பொது மக்கள் முடங்கி உள்ளனர். இந்நிலையில், அதீத வெப்ப அலையால், … Read more

pooja Ramachandran: குழந்தையை கொஞ்சி மகிழும் பூஜா ராமச்சந்திரன்.. வாவ்..செம க்யூட்!

சென்னை: நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தொகுப்பாளியான பூஜா ராமச்சந்திரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்ததால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் துணை நடிகையானார். காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா, அந்தகாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா ராமச்சந்திரன்: பார்ப்பதற்கு நல்லா மூக்கு,முழியுமா வசீகரமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப்படங்களிலும் நடித்து அனைத்து ஆடியன்சுக்கும் … Read more

“என் அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” – ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித விவரம்

சென்னை: “எனது ஆலோசனையின்றி எனது அமைச்சரை பதவி நீக்கம் செய்த உங்கள் உத்தரவு, அரசமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது, தவறானது” என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று ஒரு பக்க அறிக்கை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி நீக்கப்படுவதற்கான காரணம் குறித்து முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதம் எழுதி இருந்தார். இதற்கு முதல்வர் தரப்பில் பதில் கடிதம் … Read more

வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மணிப்பூரில் ஹெலிகாப்டரில் சென்றார் ராகுல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியின் வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் ஹெலிகாப்டர் மூலம் சுரசந்த்பூர் சென்றார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைதேயி வகுப்பினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வன்முறைக்கு 100-க்கும் … Read more