மகா கும்பமேளாவில் கண்ணீர் மல்க துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி

பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி. இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நிழல் உலக தாதாக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளிட்ட பல சர்ச்சைகள் இவருக்கு எதிராக கிளம்பின. இதனால், கடந்த 34 வருடங்களுக்கு முன் அவர் வெளிநாடுகளில் தங்கத் துவங்கினார். இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியவர், 2012-ல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து ஆன்மிக பாதையில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது. மேலும், இன்ஸ்டாகிராம் … Read more

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி வந்தார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து … Read more

மகாராஷ்டிராவின் பந்தாரா பகுதியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழில்சாலையில் நேற்று காலை நடைபெற்ற வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் ஜவஹர் நகர் என்ற பகுதியில் ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வெடிமருந்து தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர். இங்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து … Read more

ஒழுக்க விழுமியங்களை காப்பாற்ற ‘லிவ் – இன்’ உறவை கையாளும் வழிவகைகள் அவசியம்: அலகாபாத் ஐகோர்ட்

பிரயாக்ராஜ்: ‘திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழும் லிவ்-இன் உறவுக்கு அங்கீகாரம் இல்லையென்றாலும், இளைஞர்களுக்கு அதன் மீது அதிக ஈர்ப்பு இருப்பதால், சமூக ஒழுக்கங்களைப் பாதுகாக்க லிவ்-இன் உறவு நிமித்தம் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேசரி என்ற இளைஞர் மீது பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, திருமணத்துக்கு முன்பு அவருடன் பாலியல் உறவில் இருந்தகாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முதல் குகேஷ் சாதனை வரை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், கொள்கை முடக்கத்தைத் தடுக்கும், வளங்கள் திசை திருப்பப்படுவதையும் நிதிச் சுமையையும் குறைக்கும்” என்று குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய குடியரசு தின உரையின் முழு வடிவம்: “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு -வின் குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்..!

President Droupadi Murmu | நாட்டின் 76வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் முக்கிய அம்சங்கள்.

பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இந்தியா, இந்தோனேசியா முடிவு

புதுடெல்லி: பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை அதிகரிக்க இந்தியாவும் இந்தோனேசியாவும் முடிவு செய்துள்ளன. குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்பாகவும், பின்னர் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுக்கள் இடையேயான சந்திப்பாகவும் இருந்தது. இந்த சந்திப்புகளின்போது, இந்தியாவும் இந்தோனேசியாவும் … Read more

யார் நேர்மையாளர்? – டெல்லியில் பாஜக, காங்கிரஸை கொந்தளிக்க வைத்த கேஜ்ரிவால் போஸ்டர்!

புதுடெல்லி: “டெல்லியின் மிகவும் நேர்மையற்ற நபர் அரவிந்த் கேஜ்ரிவால் தான்” என்று பாஜகவின் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை நேர்மையாளர் என்றும், பிற கட்சித் தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்றும் கூறி அக்கட்சி வெளியிட்டுள்ள போஸ்டருக்கு எதிராக அனுராக் இவ்வாறு சாடியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை அதன் எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டரில் மேலே அரவிந்த் கேஜ்ரிவாலும், அவருக்கு கீழே … Read more

குடியரசு தினம் 2025: நாளை ‘இந்த’ நிறுவனங்கள் இயங்கும்-மற்றது செயல்படாது..!

Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில நிறுவனங்கள் மூடியிருக்கும், சில நிறுவனங்கள் திறந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா?  

ம.பி புனித தலங்களில் மதுவிலக்கு: உஜ்ஜைன் கோயில் 'மது பிரசாத'த்துக்கு தடை இல்லை!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் 17 புனித தலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், உஜ்ஜைன் கோயில் ‘மது பிரசாத’த்துக்கு தடை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மகேஷ்வர் என்ற நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநிலத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது என்றும், முதற்கட்டமாக 17 புனித தலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். உஜ்ஜைன் மாநகராட்சி, டாடியா, மைஹார், மண்டலா, … Read more