தெற்கு அந்தமான் கடல்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மே 4ஆம் நாள் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவும் என்றும், இதனால் மே ஐந்தாம் நாள் அப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதையடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று மே 6ஆம் நாள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுக்கும் … Read more

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடக்கம் – 28-ம் கட்ட முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று மீண்டும் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 28-வது முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில், வாரம்தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுவரை 27 மெகா கரோனாதடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. 93 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று வெகுவாகக் … Read more

கரோனா பொருளாதாரம் பாதிப்பு: இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் – இந்திய ரிசர்வ் வங்கி குழு அறிக்கை

மும்பை: கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றுரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கை குறித்து பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் மற்றும் பணம் மற்றும் நிதி நிலைகுறித்த அறிக்கையை (2021-22)ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. ஆனால் 2021-22 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் 2-வது அலையால்பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. … Read more

40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய ‘உக்ரைன் போர் நாயகனுக்கு’ உயரிய விருது: வீர மரணத்துக்கு பிறகு அரசு வழங்கியது

லண்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில் போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என அழைக்கப்பட்டார். தொடர்ந்து போரில் மிகவும் … Read more

கொழும்பில் பொலிஸாரை தாக்கி விட்டு தந்தேகநபர் தப்பியோட்டம்

பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (29) பிற்பகல் 1 மணியளவில் சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய, அதே வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேக நபர் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளார். மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைப் பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் … Read more

கொத்தாக கொல்லப்பட்ட உக்ரேனிய துருப்புகள்: இராணுவ முகாம்கள் பல சேதம்

உக்ரைனின் 17 இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய இராணுவத் தலைமை தகவல் வெளியிட்டுள்ளது. அதி நவீன ஏவுகணைகளால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தாக்குதலில் உக்ரைனின் ரோக்கட் சேமிப்பு கிடங்கு மற்றும் இராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், பகலில் ரஷ்ய விமானப்படை முன்னெடுத்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும், 23 கவச வாகனங்களை அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக உள்ளூர் கவர்னர் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்

01.05.2022 04.20:   உக்ரைனின் மரியுபோல் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற ஐ.நா.வின் முயற்சி குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இந்த  உரையாடலின் போது, ​​உக்ரைனுக்கு இங்கிலாந்து பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியை தொடர்ந்து வழங்கும் என்றும் ஜான்சன் உறுதியளித்தாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 02.40:  உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமும், முக்கிய துறைமுகமுமான ஒடேசாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையை ரஷ்ய படைகள் ஏவுகணை … Read more

நவி மும்பையில் ஏழுமலையானுக்கு கோயில் கட்ட ரூ.500 கோடி நிலம்: மகாராஷ்டிரா அரசு வழங்கியது

திருமலை: மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை இம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாவிடம் நேற்று வழங்கினார்.இதில், பங்கேற்ற ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் சஞ்சீவ் சரின் பேசுகையில்,  ‘‘ரேமண்ட் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான  கவுதம் சிங்கானியா  … Read more

வெப்பம் தாங்க முடியல… தண்ணீர் தொட்டியில் குளித்த குரங்குகள்| Dinamalar

நாகர்கோவில் : தக்கலை அருகே கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து அதில் குரங்குகள் ஆனந்த குளியல் போட்டன.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரம் மழைக்கு பின்னர் கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. ஒக்கி புயலில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்த பின்னர் மாவட்டத்தின் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தக்கலை அருகே பத்மனாபபுரம் பகுதியில் இருந்து வந்த குரங்குகள் கூட்டம், இங்குள்ள கவுன்சிலர் … Read more