ஒரே பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள் இடையே தகராறு.. இருவரிடமும் விசாரணை.!

திருப்பூரில், ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்ட விவகாரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகரைச் சேர்ந்த அஜித், ஹரி ஆகியோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் தகராறு இருந்து வந்த நிலையில் அஜித்தின் வீட்டிற்கு சென்ற ஹரி அவரது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது … Read more

ஜூன் முதல் ஆக. வரை மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை இருக்கும்: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை இருக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று (மே 24) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டாலும், காரிஃப் பருவத்தில் மட்டும் … Read more

குருவுக்கு பதில் சிஷ்யன்: 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு பணியாற்றும் சுனில்: யார் அவர்?

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றம் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்த நிலையில் தற்போது அந்த பொறுப்பை அவரது சிஷ்யனாக கருதப்படும் சுனில் கனுகோலு ஏற்கவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் … Read more

போலி பட்டா விவகாரம்: தாசில்தாருக்கு ஐகோர்ட் செக்!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்துவரும் முதியவர் தட்சிணாமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழக அரசு கிராம நத்தம் நிலத்தில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா வழங்கியதாகவும், அந்த நிலத்தில் ஓலை வீடு அமைத்து மண்பாண்டம் தொழில் செய்து வருவதாகவும், தன்னுடைய நிலத்தின் அருகே இருக்கும் சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 900 சதுரடிக்கு நிலம் வாங்கியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தாசில்தாருக்கு லஞ்சம் வழங்கி … Read more

Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!

Xiaomi Mi Band: பெரும்பாலான இந்திய பயனர்களை ஸ்மார்ட் பேண்டின் பக்கம் சாய்ந்த பெருமை சியோமி நிறுவனத்திற்கு உண்டு எனலாம். அந்த அளவிற்கு நிறுவனத்தின் Mi Band விற்பனையில் சக்கைபோடு போட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட Mi Band 6 ஸ்மார்ட் பேண்டும் நல்ல விற்பனையைக் கண்டது. இந்த நிலையில், புதிய பேண்ட் எப்போது வரும் என்று காத்திருந்த பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சீனாவின் ஷாப்பிங் தளமான jd.com இல் புதிய Xiaomi Mi Band … Read more

கேரளாவை உலுக்கிய விஸ்மயா கொலை வழக்கு…!கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் கடந்த ஜூன் 21-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு வந்தார். கணவரின் வரதட்சணை கொடுமையினால் அவர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு பயின்று வந்த விஸ்மயாவை, 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார், ஒரு ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாகக் கொடுத்து கிரண்குமார் என்ற மோட்டார் வாகன ஆய்வாளருக்கு அவரது பெற்றோர் திருமணம் … Read more

இணையத்தில் வைரலாகும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் போஸ்ட்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரின் மணமுறிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இருவரும் ஒருமனதாக பிரிவதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை அளித்தது.  நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒருவரையொருவர் பிரிந்த பின்னர் அவர்களது பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி பிசியாகி விட்டனர்.  சமந்தா பல விளம்பர படங்களில் நடிப்பது, புதிய படங்களில் கமிட்டாவது என்று படுபிஸியாகி விட்டார், அதேபோல … Read more

அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்!

சட்டமேதை அம்பேத்கருக்கு பாஜகவினர் இந்துத்துவ சாயம் பூச முயற்சிப்பதாக விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இதற்கு தகுந்தால்போல், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பதாகவும், அம்பேத்கர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் எனவும் இது குறித்து யாரிடம் வேண்டுமானும் விவாதிக்க தயாராக உள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸைப் பாராட்டிய முதல்வர்! இலங்கைக்கு உதவ ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளித்த கட்சிகள்! பெரும் சர்ச்சையை … Read more

ஐபிஎல் பிளே ஆப்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்!

ஐபிஎல் 2022ன் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளது.  நடப்பு சாம்பியன் ஆனா சென்னை அணியும், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியும் பிளே ஆப்பில் இருந்து முதல் இரண்டு அணிகளாக இந்த முறை வெளியேறியுள்ளது.  கடந்த ஆண்டும் மும்பை அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெறவில்லை.  டெல்லி, கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த கடுமையான போட்டியில் ஆர்சிபி அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றது.  மேலும், குஜராத், … Read more

நீரில் மூழ்கிய ஹோண்டுராஸ் அகதிகள் படகு… கரை ஒதுங்கிய அகதிகளின் சடலங்கள்.!

மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள வெராக்ரூஸ் மாகாணத்தில் 3 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மெக்சிகோ நோக்கி வந்த ஹோண்டுராஸ் அகதிகள் படகு நீரில் மூழ்கியதையடுத்து அந்த சடலங்கள் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது குழந்தை உட்பட 4 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு கடற்கரையில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 4 பேர் மாயமாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதையடுத்து அவர்களை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். Source link