சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இளம் வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி

சின்சினாட்டி, சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் ஓஹியோவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்று ஒன்றில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (40 வயது) இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ராடுகானு (19 வயது) மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய எம்மா ராடுகானு 6-4, 6-0 செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். வெற்றிக்கு பிறகு பேசிய … Read more

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் நாளை பலப்பரீட்சை

ஹராரே, லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை ( 18-ந்தேதி) நடக்கிறது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டி யிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது. ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் , வீராட் கோலி, பும்ரா … Read more

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்

கொல்கத்தா, ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் இந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கு முந்தைய சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது அந்த அணி. இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் … Read more

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேனா?- எலான் மஸ்க் விளக்கம்

வாஷிங்டன், உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக இன்று டுவீட் செய்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் , நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது; பாகிஸ்தானுடன் எதுவும் இல்லை…!

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023-27 ஆண்கள் கிரிக்க்கெட் அணியின் சுற்றிப்பயண பட்டியலை வெளியிட்டு உள்ளது. 2023-27 சுழற்சியில் 12 நாடுகள் மொத்தம் 777 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்கள். , இது கடந்த 694 போட்டிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த காலகட்டத்தில் 12 நாடுகள் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 323 டி20 போட்டிகளில் விளையாட உள்ளன. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் இந்தியா மொத்தம் 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் … Read more

ஆன்மிக வழியில் ஷிகர் தவான்… ஜிம்பாப்வே தொடரில் நிகழ்ந்த மாற்றம்

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஹராரேயில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தவான், “ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில், ஆவேஷ் கான், … Read more

பணக்கஷ்டத்தில் தவிக்கும் சச்சினின் தோஸ்த்… வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலைமை

இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்தவர் சச்சின். சச்சினுக்கு நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளியும் ஒரு கிரிக்கெட் வீரர். சச்சினும், காம்ப்ளியும் இணைந்து தங்களது பள்ளி கால போட்டி ஒன்றில் 789 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம் உலகிற்கு தெரியவந்தனர்.சச்சினுக்கு பிறகு வினோத் காம்ப்ளி இந்திய அணிக்குள் வந்தார். அணிக்குள் நுழைந்த புதிதில் சச்சின் அளவுக்கு முழு ஃபார்மில் இருந்தார். பல போட்டிகளை வென்றும் கொடுத்தார். முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 793 ரன்களை 113.29 என்ற சராசரியில் … Read more

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் – இளம் வீரர் ஷாபாஸுக்கு வாய்ப்பு

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஹராரேயில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையே, அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக … Read more

இனி CSK-க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! ஜடேஜா அதிரடி முடிவு!

இன்னும் ஓரிரு மாதங்களில் ஏதாவது அதிசயம் நடந்தால் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ரவீந்திர ஜடேஜாவின் தொடர்பு முடிவுக்கு வரும்.  கடந்த மே மாதம் ஐபிஎல் 2022 முடிந்ததில் இருந்து ஜடேஜா சிஎஸ்கே நிர்வாகத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறார்.  பொதுவாக சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போல் செயல்படுவதாக அனைவராலும் கூறப்படும்.  வீரர்கள் ஆண்டு முழுவதும் சிஎஸ்கே உரிமையுடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் என்சிஏவில் மறுவாழ்வு பெற்ற ஜடேஜா, மீண்டும் இந்திய அணிக்கு … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நெதர்லாந்து அணி போராடி தோல்வி

ரொட்டர்டாம், நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரொட்டர்டாம் நகரில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக், 19 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஃபக்கர் சமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து … Read more