”உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆன்லைனில் கல்வியை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் <!– ”உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆன்லைனில் கல்வ… –>

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள் அயலக நலத்துறையில் பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக, வெளிநாடு சென்று படித்து வரும் தமிழக மாணவர்களுடைய விவரங்கள் இனி வரும் காலங்களில் சேகரித்து வைக்கப்படும் என கூறினார். மாணவர்கள் 2 ஆயிரம் பேர் உட்பட உக்ரைனில் 5 ஆயிரம் தமிழர்கள் இருப்பதாகவும், அவர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் உடனடியாக அவர்களை மீட்க … Read more

தமிழகத்தில் 400க்கும் கீழ், சென்னையில் 100க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று: 1,013 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,49,373. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,05,624. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 83,97,271 பேர் வந்துள்ளனர். சென்னையில் 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் – உக்ரைன் நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் என அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் உக்ரைனில் … Read more

ரஷ்ய தாக்குதல் 5-ம் நாள் | உக்ரைனில் இதுவரை பலி 352 – எதிர்நோக்கப்படும் அமைதிப் பேச்சு; அவசர ஆலோசனைக்கு தயாராகும் ஐ.நா.

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி, உக்ரைன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நித்திரை கொள்ள ஏதுவான ஓர் இரவாக அமைந்தது. பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக … Read more

உலகில் எந்தப் போர் நடந்தாலும்.. முக்கியக் காரணமான மூலப் புள்ளி.. "அமெரிக்கா"!

ஒன்று யாருடனாவது தான் சண்டையிட வேண்டும் .. அல்லது யாரையாவது சண்டையில் இழுத்து விட வேண்டும்.. சண்டையில்லாத உலகமே இருக்கக் கூடாது.. இதுதான் அமெரிக்காவின் அடிப்படை நோக்கமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு உலகப் போர்களின் போக்கையும், அந்தப் போர்கள் உருவாகக் காரணமாக இருந்தவை குறித்தும் சிந்திக்கத் தோன்றுகிறது. உலகில் எந்த மூலையில் எந்த போர் நடந்தாலும் அதற்கு ஒரு முக்கிய காரணம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதுதான் அமெரிக்கா. எந்தப் போராக இருந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்களிப்பு … Read more

வலிமை இண்டர்வெலில் அரபிக் குத்து… எழுந்து ஆடி என்ஜாய் செய்த ரசிக்ரகள்!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய படம் வலிமை . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் கடந்த 24ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கேப்டனா இது… மனம் வலிக்கிறது… விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்! படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ராம் சினிமாஸ் தியேட்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ … Read more

உக்ரைனில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம்! – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்ததை அடுத்து உக்ரைனில் உள்ள இரண்டு மாணவர்கள் உட்பட சுமார் 40 இலங்கை பிரஜைகளை உக்ரைன்-போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வெளியேற்றும் செயல்முறையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக வார்சாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்குவதை அமைச்சகம் பலப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. “அங்காரா மற்றும் வார்சாவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் உக்ரைனை விட்டு … Read more

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய முடிவுக்கு ரஷ்யா கண்டனம் <!– உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய முடிவுக்கு ரஷ… –>

உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ரஷ்யாவுக்கு எதிரான போக்கு எனவும், ஆபத்தான செயல் எனவும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய … Read more

மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்புப் போராட்டம் – பல இடங்களில் முடங்கிய போக்குவரத்து <!– மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்புப் போராட்டம் – பல இடங்… –>

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து பாஜகவினர் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கிள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலந் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. பீர்பூம், சிலிக்குரி, ஹூக்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில்கள் செல்வது தாமதமானது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு … Read more

12 ரஷ்ய ஐ.நா தூதர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்!

ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதரகப் பணியை சேர்ந்த 12 பேர் மார்ச் 7-ஆம் திகதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக உலக அமைப்பிற்கான ரஷ்யாவின் தூதர் தெரிவித்தார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா டால்டன் கூறுகையில், வெளியேற உத்தரவிடப்பட்டவர்கள் “நமது தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அமெரிக்காவில் தங்களுடைய சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் ஐநா தலைமையக ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கை பல மாதங்களாக வளர்ச்சியில் உள்ளது” … Read more