மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து ஆட்சியர் சமீரன் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரல்.!

மேட்டுப்பாளையம் அருகே மலைவாழ் மக்களின் குறைகளை கேட்கச் சென்ற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன், அவர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. பில்லூர் வனப்பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களின் தேவைகளை, அவர்களது இடத்திற்கே சென்று கேட்டறியும் வகையில் கொடியூர் மலைக்கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அதில், மலைவாழ் மக்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனையடுத்து பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பாரம்பரிய இசைக் … Read more

விருதுநகர் பாலியல் வழக்கு | குற்றம் நடந்த குடோனில் கைதானவர்களிடம் விசாரணை 

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரில் இருவரை குற்றம் நடந்த குடோனுக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 31) காலை விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் உள்ளிட்ட … Read more

ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லைத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவு, களனி மற்றும் கல்கிலை பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  … Read more

மதுபான கொள்கையை மாற்றியது கேரள அரசு- ஐ.டி. தொழில்நுட்ப பூங்காக்களில் பீர் பப்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் டெக்னோபார்க், கொச்சி இன்போ பார்க் மற்றும் கோழிக்கோடு ஐடி பார்க் என மூன்று ஐ.டி. பூங்காக்கள் உள்ள நிலையில், இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. தொழில் வல்லுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு, மதுபானக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஐ.டி.தொழில்நுட்ப பூங்காக்களில் பீர் பப்களை அனுமதிப்பது மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய சில்லறை மது விற்பனை நிலையங்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா மேம்பாட்டு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,166,106 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,166,106 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 488,081,032 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 422,934,797 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,316 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 15 நாளில் ஊதியம் வழங்க வேண்டும்: சோனியா

புதுடெல்லி: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 15 நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் நேற்று  பேசிய காங். தலைவர் சோனியா காந்தி, ‘நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெருகி வரும் போதிலும் 2020ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 35% குறைவாக வேலைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்கான நிதி படிப்படியாக குறைக்கப்படுகிறது. இதனால் ஊதியம் வழங்கப்படுவது … Read more

அறக்கட்டளை துவக்க விழா| Dinamalar

புதுச்சேரி-வழக்கறிஞர் பரசுராமன் அறக்கட்டளை துவக்க விழாவையொட்டி, மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.மறைந்த வழக்கறிஞர் பரசுராமன் பெயரில், புதுச்சேரி காமராஜர் நகர், தமிழ்செல்வி வீதி எண், 5 என்ற முகவரியில் அறக்கட்டளை நிறுவப்பட்டு உள்ளது.இதன் துவக்க விழா, கடந்த 29ம் தேதி நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை, ஸ்வச் பாரத் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியை காந்திமதி கூறுகையில் ‘சமூதாயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள், கிராமப்புற … Read more

5 மொழிகளில் உருவாகும் ‛கொட்டேஷன் கேங்'

விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'கொட்டேஷன் கேங்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் விவேக் குமார் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான 'கொட்டேஷன் கேங்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை … Read more

இலங்கை அதிபரின் வீடு முற்றுகை; போலீஸ் வாகனத்துக்கு தீ| Dinamalar

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்; போலீஸ் பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால், நீர் மின் நிலையங்கள் இயங்க … Read more