சென்னை அருகே சோகம்.! மகன் பிறந்த நாளில் தந்தை வெட்டி கொலை.! 5 பேர் கைது.!

சென்னையில் மகன் பிறந்த நாளில் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாக பகுதியில் இரும்பு கடை ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முனுசாமி அதே பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெரியமேடு போலீசார், … Read more

பிரதமர் தலைமையில் ஆலோசனை.. டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில், … Read more

'தளபதி 67' படத்தின் மாஸான லேட்டஸ்ட் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படம் உருவாக்கப்போவது குறித்து எப்போது தகவல்கள் கசிந்ததோ அப்போதிலிருந்தே ரசிகர்கள் பலரும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.  ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும் அடிக்கடி அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டே இருக்கிறது, தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக ஒரு மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  அதாவது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ‘தளபதி 67’ படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இன்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோஸில் ‘தளபதி 67‘ படத்திற்கான … Read more

தமிழகத்தில் 2ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29/11/2022 முதல் 01/12/2022: தமிழ்நாடு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது … Read more

500 கிலோ கஞ்சாவை தின்று ஏப்பம் விட்ட எலிகள் – போலீஸ் வினோத விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையத்தின் கிடங்கில், 500 கிலோவிற்கு அதிகமான கஞ்சா பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, போதை மருத்துகள் மற்றும் உளவியல் மருந்துகள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 586 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதாவது, ஒரு வழக்கில் 386 கிலோ  கஞ்சாவையும், மற்றொரு வழக்கில் 195 கிலோ கஞ்சாவையும் என மொத்தம் 586 கிலோ … Read more

தூய்மை பணியாளரான யோகிபாபு – ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தனது அசாத்தியமான நடிப்பால் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறக்க, சந்தானம் ஹீரோவாக மாற, சூரி, சதீஷின் காமெடி பலருக்கு போர் அடிக்க நகைச்சுவைக்கான வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பினார். தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு. தொடர்ந்து காமெடியில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த … Read more

அட நம்புங்க…வெறும் ரூ. 59-க்கு அசத்தலான நோக்கியா போன்: பிளிப்கார்ட்டில் கோலாகலம்

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் தினமும் பல சலுகைகளும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படுகின்றன. இன்று ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா வலுவான பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்றது. வாடிக்கையாளர்கள் நோக்கியாவின் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க விரும்பினால், இன்று சரியான வாய்ப்பு வந்துள்ளது. இன்று, Nokia C21 Plus போனுக்கு ஒரு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜில் மூன்று நாட்கள் நீடிக்கும். ரூ.12,000 மதிப்புள்ள இந்த போனை இன்று வெறும் ரூ.59-க்கு வாங்க … Read more

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சி கூடாது: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கம்

சென்னை : தனியார் பள்ளிகளில் அரசியல், மதம், சாதி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கம் அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கம் சட்டத்தில் ஏற்கனவே தடை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அண்ணாநகர் தனியார் பள்ளியில் நவம்பர் 26,27-ல் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

”ஒருவேளை இன்ஜினியரா இருப்பாரோ” – தவறவிட்ட airpod-ஐ சாமார்த்தியமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அவ்வப்போது வித்தியாசமான, ஆச்சர்யமளிக்கக் கூடிய செயல்கள் நடைபெறுவதும் அது சமூக வலைதளங்களில் PeekBengaluru என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பகிரப்படுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், ஆட்டோவில் சென்ற ஒரு பெண்ணின் airpod அரை மணிநேரத்திற்குள் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குறித்த ட்வீட்தான் தற்போது நெட்டிசன்களின் கமென்ட்ஸ்களுக்கு தீனி போட்டிருக்கிறது என்றே கூறலாம். Lost my AirPods while traveling in an auto. Half an hour later this … Read more

மக்களே உஷாரா இருங்க.. நூதன மோசடி அதிகரிப்பு: பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் அபேஸ்..!

சேலத்தில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாபாரதி (45). இவர், கடந்த 14-ம் தேதி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 13-ம் தேதி என்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி … Read more